தளபதி விஜய் தற்போது நடித்து வரும் 63 ஆவது திரைப்படம், பெண்கள் கால் பந்து விளையாட்டை மையாப்படுத்தி எடுக்கப்பட்டு வருகிறது. 

இந்த படத்தில் ஏற்கனவே, யோகி பாபு, பரியேறும் பெருமாள் படத்தின் நாயகன் கதிர், ரோபோ ஷங்கர், ஆனந்த ராஜ் , பாலிவுட் நடிகர்  ஜாக்கி ஷெராப் ஆகியோர் நடிப்பது உறுதியாகியுள்ள நிலையில், இந்த படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வரும் நடிகை பற்றிய புதிய தகவல் வெளியாகியுள்ளது.

அதாவது இந்த படத்தில், ஜெய் நடித்த 'ஜருகண்டி' படத்தில் அவருக்கு ஜோடியாக நடித்த மலையாள நடிகை ரெபா மோனிகா ஜான், கால் பந்து விளையாட்டு பெண்கள் அணியின் கேப்டனாக நடிக்கிறாராம். 

நாளுக்கு நாள் தளபதி விஜயின் 63 ஆவது படம் குறித்து புதிய புதிய தகவல்கள் வெளியாகி வருவது விஜய் ரசிகர்களை குஷியாக்கி உள்ளது