தளபதி விஜயுடன் நடித்த நடிகை அமீஷா படேல் மீது, பண மோசடி வழக்கு போடப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

நடிகர் விஜய் நடித்த 'புதிய கீதை' படத்தில் இரண்டாவது கதாநாயகியாக நடித்தவர் அமீஷா படேல். இந்த படத்திற்கு பின் பாலிவுட் திரையுலகில் பிஸியாக இருந்ததால் தமிழ் படங்களில் இவரால் நடிக்க முடியவில்லை. 

அதன் பிறகு இவர் தமிழ் சினிமாவில் எந்த நடிகருடனும் நடிக்கவில்லை. இந்நிலையில் 'குணால் க்ரூமர்' என்பவருடன் இணைந்து அமீஷா படேல் 'டெய்சி மேஜிக்' என்கிற படத்தை தயாரித்தார்.

அதற்காக அஜய் குமார் சிங் என்பவரிடம் 2.5 கோடி கடனாக பெற்றார். ஆனால் இந்த படம் வெளிவராத நிலையில் அமீஷா படேல் கடனாக பெற்ற பணத்தை, அஜய் திரும்பக் கேட்டுள்ளார்.

அதற்கு அமீஷா படேல் செக் ஒன்று கொடுத்துள்ளார். வங்கிக் கணக்கில் பணம் இல்லாததால் இந்த செக் பவுன்ஸ் ஆகி உள்ளது. அதனால் அமீஷா படேலிடம் பணம் கேட்டதற்கு அவருக்கு தெரிந்த நபர்கள் அந்த நபரை மிரட்டியுள்ளனர் அதனால் பைனான்சியர் போலீசாரிடம் புகார் தெரிவித்துள்ளார். 

இந்த புகாரில் அடிப்படையில், அவர் மீது பண மோசடி வழக்கு பதிவு செய்து போலீசார் அமீஷா படேலிடம் விசாரணை செய்து வருகிறார்கள்.