இளைய தளபதி விஜய்யின் அம்மா ஷோபா சந்திரசேகர். இவர் பிரபல பாடகியும் கூட. இந்நிலையில் இந்த தீபாவளிக்கு வரவிருக்கும் கொடி படத்தில் விஜய்யின் தந்தை சந்திரசேகர் நடித்துள்ளார்.

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred

முதலில் இவரிடம் கதையை கூறிய போது இவர் நடிக்க மாட்டேன் என்று கூறி விலகி விட்டாராம்.

பிறகு திடிரென்று போன் செய்து நான் நடிக்கின்றேன் என கூறியுள்ளார், இதற்கு இவர் விளக்கம் அளிக்கையில் ‘முதலில் நான் வேறு எந்த இயக்குனர் இயக்கத்திலும் நடிக்க மாட்டேன்.

ஆனால், தனுஷ் படம் என்று வீட்டில் கூறியவுடன், ஷோபா கோபமாக “நானெல்லாம் தனுஷ் ரசிகை, கண்டிப்பாக நீங்கள் நடிக்க வேண்டும்” என்று கண்டிஷன்னாக கூறிவிட்டார்’ என விஜய்யின் தந்தையே இயக்குனரிடம் கூறினாராம்.