Vijay mersal get UA certificate
தளபதி நடிப்பில் தீபாவளிக்கு விருந்தாக நாளை வெளியாகவிருக்கும் மெர்சல் படத்திற்கு விலங்குகள் நல வாரியம் நேற்று மாலை பச்சைக்கொடி காட்டிவிட்டது. இதனால் இன்று மெர்சல் திரைப்படத்துக்குக் கிடைக்குமென எதிர்பார்க்கப்படும் யு/ஏ சர்டிஃபிகேட் கிடைத்துவிட்டது.
மெர்சல் படத்தில் இடம்பெற்றுள்ள புறா, யானை, காளை, பசு, ஒட்டகம், பாம்பு காட்சிகள், கிராஃபிக்ஸ் என்பதற்கான ஆதாரங்கள் சமர்ப்பிக்கப்படாத காரணத்தினால் விலங்குகள் நல வாரியம் தடையில்லா சான்று வழங்கப்படாமல் இருந்தது. இதனால், தணிக்கை குழு சான்றிதழ் வழங்காமல் இழுத்தடித்துக்கொண்டே இருந்தது. இந்நிலையில் விலங்குகள் நல வாரியம் மெர்சல் திரைப்படத்தை ஆய்வு செய்தனர்.

இதனாலேயே, நேற்று விலங்குகள் நல வாரியம் அவசர வாரமாக ஆலோசனை போட்டது. படக்குழு தரப்பில் சமர்ப்பிக்கப்பட்ட அனைத்து ஆவணங்கள் மற்றும் காட்சிகளைப் பார்த்த விலங்குகள் நல வாரியம் ஒருவழியாக என்.ஓ.சி கொடுத்தது.
இதனையடுத்து இன்று சென்சார் போர்டு ஏற்கெனவே குறிப்பிட்ட யு/ஏ சான்றிதழைக் கொடுத்துள்ளது. இதில் சிறப்பு என்னன்னா? வேகமாகப் மெர்சல் திரைப்படத்திலிருந்து ஒரு சின்ன காட்சிக்கூட நீக்கலயாம். படத்துக்கு இருந்த தடை நீங்கியதால் விஜய் ரசிகர்கள், தீபாவளியை ‘மெர்சல் தீபாவளி’- யாகக் கொண்டாடும் உற்சாகத்தில் இருக்கின்றனர்.
