Vijay meet CM edappadi palanisami for His mersal release

மெர்சல் பட பிரச்சனை காரணமாக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமியுடன் நடிகர் விஜய் சந்தித்து பேசியுள்ளார்.

டைட்டில் தகராறு, கேளிக்கை வரி பிரச்சனை என விஜயின் மெர்சல் படத்திற்கு மேலும் மேலும் சிக்கல் ஏற்பட்டுள்ளது. பட ரிலீசுக்கு இன்னும் நான்கே நாள் உள்ள நிலையில் பல்வேறு பிரச்சனைகள் வரிசை கட்டி நிற்கிறது.

எப்படியும் எல்ல பிரச்சனைகளையும் சமாளித்து படத்தை வெளியிட்ட தீருவோம் என தயாரிப்பு தரப்பு ரசிகர்களை சமாதானப்படுத்தி வந்த நிலையில் புறா மூலம் பீட்டா வேட்டு வைத்ததால் தணிக்கை குழு சான்று தர மறுத்துள்ளது. இதனால் சொன்ன நேரத்தில் படம் வெளியாகுமா ஆகாதா என ரசிகர்களை புலம்பி வருகின்றனர்.

படம் வெளியாகும் என்ற நம்பிக்கையில் மெர்சலுக்கான முன்பதிவு பல்வேறு திரையரங்குகள் நேற்றே தொடங்கப்பட்டது. அதுமட்டுமல்ல ஆன் லைனில் முன்பதிவு அமோகமாக ஆரம்பித்துள்ளது.

இந்நிலையில், தணிக்கை குழு சான்று பிரச்சனை காரணமாக படம் வெளியாவதை சிக்கல் நீடித்து வருவதால் தயாரிப்புக்குழு விஜயிடம் ஆலோசனை தடத்தியதாக தெரிகிறது. இந்த சூழலில் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமியுடன் நடிகர் விஜய் சந்திப்பு நடந்துள்ளது.

முதலமைச்சரின் க்ரீன்வேஸ் இல்லத்தில் நடைபெறும் இச்சந்திப்பில், அமைச்சர் கடம்பூர் ராஜூவும் உடனுள்ளார். மெர்சல் படம் வெளிவருவதில் சிக்கல் நீடிக்கும் நிலையில், இச்சந்திப்பு நடந்துள்ளது குறிப்பிடத்தக்கது.