vijay mallya house buy the tamil actor
பல்வேறு வங்கிகளில் ஒன்பதாயிரம் கோடி ரூபாய் கடன் வாங்கி திருப்பி செலுத்தாமல் தற்போது லண்டனுக்கு தப்பி சென்று வசித்து வருகிறார் விஜய் மல்லையா.
இவரை தேடி அலைந்த, அணைத்து வங்கிகளும் அலுத்துப் போய் ஒரு கட்டத்தில், இந்தியாவில் உள்ள வரத்து சொத்துக்களை விற்று அந்த பணத்தில் தங்களுடைய கடன்களை பைசல் செய்துகொள்ளலாம் என தீர்மானித்தனர்.
இதன் காரணமாக தற்போது இந்தியாவில் அவருக்கு சொந்தமாக உள்ள சொத்துக்களை வங்கிகள் ஏலம் விட்டு பணத்தை திரும்ப பெற முயற்சி செய்து வருகின்றன.
கோவாவில் உள்ள அவரது சொகுசு வில்லா தற்போது நடிகர் சச்சின் ஜோஷி 73 கோடி ரூபாய்க்கு வாங்கியுள்ளார்.
JMJ group of industries உரிமையாளர் ஜெகதீஷ் ஜோஷியின் மகன் தான் இந்த சச்சின் ஜோஷி.
பல தெலுங்கு மற்றும் ஹிந்தி படங்களில் நடித்துள்ள இவர் தற்போது "யார் இவன்" என்ற தமிழ் படத்தில் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
அந்த வில்லா இதற்குமுன் ஏலம் வந்தபோது ரூ. 86 கோடிக்கு விலை நிர்ணயிக்கப்பட்டது. ஆனால் அதை வாங்க யாரும் முன்வரவில்லை. தற்போது அதை நேரடியாக விலை பேசி வாங்கியுள்ளார் சச்சின் ஜோஷி.
