​நடிகர் விஜய்க்கே தெரியாமல் அவருடைய அப்பா எஸ்.ஏ.சந்திரசேகர் கட்சி ஆரம்பிக்க முயன்றது கோலிவுட்டிலும், அரசியல் வட்டாரத்திலும் பரபரப்பை ஏற்படுத்தியது. விஜய் மக்கள் இயக்கத்தை அகில இந்திய தளபதி விஜய் மக்கள் இயக்கமாக மாற்ற உள்ளதாக தகவல்கள் வெளியாகின. இந்நிலையில் விஜய் தரப்பில் இருந்து மறுப்பு தெரிவிக்கப்பட்டது. உடனடியாக முந்திக்கொண்ட எஸ்.ஏ.சந்திரசேகர் நான் தான் கட்சியை பதிவு செய்யும் வேலையில் இறங்கியிருக்கிறேன். அதற்கும் விஜய்க்கும் எவ்வித சம்பந்தமும் இல்லை என விளக்கமளித்தார்.

சற்று நேரத்திலேயே விஜய் தரப்பில் இருந்து அறிக்கை ஒன்று வெளியானது. அதில், என் தந்தையின் கட்சிக்கும் தனக்கும் எவ்வித தொடர்பும் இல்லை எனக்கூறிய விஜய், அதில் தனது ரசிகர்கள் சேரக்கூடாது  என்றும் கட்டளை விடுத்தார். அதுமட்டுமின்றி தனது பெயரையோ புகைப்படங்களையோ பயன்படுத்தினால் சட்ட ரீதியாக நடவடிக்கை எடுப்பேன் என்றும் அப்பாவுக்கே எச்சரிக்கை விடுத்தார் விஜய். இதை சிறிதும் எதிர்பார்க்காத எஸ்.ஏ.சி விஜய் ஒரு விஷ வலையில் சிக்கியுள்ளதாகவும், அந்த பிரச்சனைகளில் இருந்து விஜயை காப்பாற்றவே தான் அரசியல் கட்சி ஆரம்பித்துள்ளதாகவும்  குண்டை தூக்கி போட்டார். 

 

இதையும் படிங்க: “பாண்டியன் ஸ்டோர்ஸ்” சீரியல் நடிகைக்கு திடீர் உடல் நலக்குறைவு... ஆபத்தான நிலையில் தீவிர சிகிச்சை...!

இதையடுத்து விஜய் பெயரில் எனக்கு கட்சியே வேண்டாம் என எஸ்.ஏ.சந்திரசேகர் தலைமை தேர்தல் ஆணையத்திற்கு கடிதம் எழுதியுள்ளார். இப்படி அப்பாவால் விஜய்க்கு அடுக்கடுக்கான  பிரச்சனைகளும், தேவையற்ற சிக்கல்களும் உருவானதால் அவரை காக்க வேண்டுமென அவருடைய விஜய் மக்கள் இயக்க நிர்வாகிகள் அதிரடி முடிவு ஒன்றை எடுத்துள்ளனர். 

 

இதையும் படிங்க: நீ சிண்ட்ரெல்லாவின் ஜெராக்ஸா?... கொஞ்சுண்டு கவர்ச்சி காட்டி ரசிகர்களின் வர்ணனைகளை வாரிக்குவிக்கும் அனிகா...!

விஜய் மக்கள் இயக்கம் சார்பில் ஒரு யூடியூப் சேனலை தொடங்க முடிவு செய்துள்ளனர். இந்த  யூ-டியூப் சேனல் மூலமாக,  விஜய் எடுக்கும் முடிவு மற்றும் அவர் தொடர்பான செய்திகளை வெளியிடவும்,  விஜய் மக்கள் இயக்கம் செய்யும் நற்பணிகளையும் வெளியிடவும் திட்டமிட்டுள்ளார்களாம்.