Asianet News TamilAsianet News Tamil

vijay makkal iyakkam :தேர்தல்களத்தில் ருசிகரம்! வெற்றிபெற வேண்டி கிடா விருந்து வைத்த விஜய் மக்கள் இயக்கத்தினர்

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் வெற்றிபெற வேண்டி, மதுரையில் உள்ள புகழ்பெற்ற பாண்டி கோவிலில்  விஜய் மக்கள் இயக்கத்தினர், கிடா வெட்டி சிறப்பு வழிபாடு நடத்தினர். 

vijay makkal iyakkam members soecial pooja in madurai pandi kovil
Author
Tamil Nadu, First Published Feb 3, 2022, 12:23 PM IST

தமிழகத்தில் கடந்த ஆண்டு நடந்து முடிந்த ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தலில் விஜய் மக்கள் இயக்கத்தின் ஆதரவுடன் முதன்முறையாக வேட்பாளர்கள் போட்டியிட்டனர். கட்சி சார்பு இல்லாத ஊராட்சி மன்றத் தலைவர் மற்றும் கிராம ஊராட்சி வார்டு உறுப்பினர் பதவிகளுக்கு மொத்தம் 169 இடங்களில் போட்டியிட்டனர். 

அதில் போட்டியின்றி 13 பேர், போட்டியிட்டு 102 பேர் என மொத்தம் 115 பேர் வெற்றி பெற்றனர். வெற்றி பெற்ற பிரதிநிதிகளை நடிகர் விஜய் நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்தார்.

vijay makkal iyakkam members soecial pooja in madurai pandi kovil

தற்போது தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சிகளுக்கான தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. 21 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள், 490 பேரூராட்சிகளில் பிப்ரவரி 19-ம் தேதி ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடக்கிறது. 

பிப்ரவரி 22-ம் தேதி வாக்கு எண்ணிக்கை நடக்கிறது. ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தலைத் தொடர்ந்து தற்போது நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலிலும் விஜய் மக்கள் இயக்கத்தைச் சேர்ந்தவர்கள் போட்டியிட உள்ளனர்.

இந்நிலையில், நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் வெற்றிபெற வேண்டி, மதுரையில் உள்ள புகழ்பெற்ற பாண்டி கோவிலில்  விஜய் மக்கள் இயக்கத்தினர், கிடா வெட்டி சிறப்பு வழிபாடு நடத்தினர். இதில் கலந்துகொண்ட விஜய் மக்கள் இயக்க நிர்வாகிகளுக்கு தடபுடலாக கிடா விருந்து வைக்கப்பட்டது.

vijay makkal iyakkam members soecial pooja in madurai pandi kovil

இதன் பின்னர் செயற்குழு கூட்டம் நடத்தப்பட்டது. அதில் மதுரை மாநகராட்சிக்கு உட்பட்ட 100 வார்டுகளில் போட்டியிட முடிவு செய்துள்ளனர். மேலும் விஜய் மக்கள் இயக்கம் சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களுக்கு முழு ஒத்துழைப்பு அளித்து களப்பணி ஆற்றவும் அவர்கள் உறுதியேற்றனர். 

Follow Us:
Download App:
  • android
  • ios