இளைய தளபதி விஜய் தற்போது நடித்து வரும் 'மெர்சல்' படத்தில் மேஜிக் மேன் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இந்த படத்தில் இவருக்கு மேஜிக் பயிற்சிகொடுத்த பல்கேரியா நாட்டை சேர்ந்த 'டேனி பெலவ்' விஜக்கு பயிற்சிகொடுத்த அனுபவத்தைப்பற்றி கூறியுள்ளார்.

இது குறித்து அவர் கூறுகையில் தன்னுடைய நெருங்கிய நண்பர் மூலமாகத்தான் இந்த வாய்ப்பு தனக்கு கிடைத்தது என்றும். நான் விஜய்க்கு பயிற்சிகொடுக்க ஒற்றுக்கொண்ட போது தனக்கு விஜய் மிக பெரிய நடிகர் என்பது தெரியாது என்றும் கூறியுள்ளார்.

மேலும் நான் பயிற்சிகள் கொடுக்கும்போது அதனை மிகவும் சீக்கிரம் புரிந்துக்கொள்ளும் ஆற்றல் விஐக்கு உண்டு, இந்த படத்தில் எந்த மாதிரியான மேஜிக் காட்சிகள் உள்ளது என்பதை தற்போது தன்னால் கூற முடியாவிட்டாலும். விஜய் வரும் காலத்தில் மேஜிக் கலையில் கவனம் செலுத்த தொடங்கினாள் மிக சிறந்த  மேஜிக் மேனாக வருவார் என பயிற்சியாளர் 'டேனி பெலவ்' பெருமித்ததோடு கூறியுள்ளார்.