மறுபடியும் முதல்ல இருந்தா... மீண்டும் விஜய்யுடன் மல்லுக்கு நிற்கும் கார்த்தி... என்ன ஆகப்போகுதோ என்ற கலக்கத்தில் ரசிகர்கள்...!

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு வெளியான‘பிகில்’,‘கைதி’ திரைப்படங்கள் ரசிகர்களிடம் மிகுந்த வரவேற்பு பெற்றன. மாஸ் ஹீரோ என்பதால் முதலில் விஜய் படத்திற்கு மட்டுமே தியேட்டர் உரிமையாளர்கள் அதிக முக்கியத்துவம் கொடுத்தனர். இதனால் கார்த்தியின்‘கைதி’ திரைப்படம் திரையரங்குகள் கிடைக்காமல் திண்டாடியது. மக்கள் மற்றும் பத்திரிகைகளின் அசத்தலான விமர்சனம்‘கைதி’ படத்திற்கான பிளாட்பார்ம் ஆக அமைந்தது. ரசிகர்களின் விருப்பத்தை நிறைவேற்றுவதற்காக‘கைதி’ படங்களின் ஸ்கீரினிங் காட்சிகள் அதிகரிக்கப்பட்டன.

இதனால் முதல் வாரத்தில் பாக்ஸ் ஆபீஸ் வசூல் செய்து வந்த ‘பிகில்’ திரைப்படம் சற்றே சறுக்க ஆரம்பித்தது. வணிக ரீதியாகவும் ‘கைதி’திரைப்படத்தின் வசூல்,‘பிகில்’ படத்தை ஓவர்டேக் செய்ய ஆரம்பித்தது. ‘கைதி’படத்திற்கு கிடைத்த ரெஸ்பான்ஸால் இயக்குநர் லோகேஷ் கனகராஜ், தற்போது விஜய்யின் ‘தளபதி 64’படத்தை இயக்க களம் இறங்கியுள்ளார். விஜய் சேதுபதி, ஆண்ட்ரியா, கெளரி கிருஷ்ணன், சாந்தனு என பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்து வரும்‘தளபதி 64’படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு சைலண்டாக சென்னையில் நிறைவு பெற்றுள்ளது. இதையடுத்து இரண்டாம் கட்ட படப்பிடிப்பு டெல்லியில் தொடங்கி நடைபெற்று வருகிறது. படத்தை விரைவில் முடித்து அடுத்த ஆண்டு கோடை விடுமுறை தினத்தில் வெளியிட படக்குழுவினர் திட்டமிட்டுள்ளனர். இதற்கான ஆயத்த பணிகளும் புயல் வேகத்தில் நடைபெற்று வருகிறது. 

இந்த நிலையில்,‘கைதி’படத்தை தொடர்ந்து‘சுல்தான்’படத்தில் நடித்து வருகிறார் கார்த்தி. சிவகார்த்திகேயனின்‘ரெமோ’படத்தை இயக்கிய பாக்கியராஜ் கண்ணன் தான்‘சுல்தான்’படத்தை இயக்குகிறார். இதில் கார்த்திக்கு ஜோடியாக ராஷ்மிகா மந்தனா நடித்து வருகிறார்.  இந்த படத்தையும் கோடை விடுமுறைக்கு இறக்க தயாரிப்பாளர் தரப்பு முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ஏற்கெனவே 2011ம் ஆண்டு‘காவலன்’,‘சிறுத்தை’ படங்கள் நேருக்கு நேர் மோதின. அதில் ‘சிறுத்தை’  திரைப்படம் ப்ளாக் பஸ்டர் ஹிட் அடித்தது. தற்போது ஒரே நேரத்தில் வெளியான‘பிகில்’,‘கைதி’திரைப்படங்களில் கூட கார்த்தியின் திரைப்படமே முன்னணியில் உள்ளது. இப்போது மூன்றாவது முறையாக கார்த்தி, விஜய் படங்கள் மோத உள்ளதால் என்ன ஆகுமோ என்ற கலக்கம் ரசிகர்களிடையே ஏற்பட்டுள்ளது.