தளபதி விஜய்க்கு மிகப்பெரிய அளவிலான ரசிகர் கூட்டம் இருக்கிறது. அவரது கண் அசைவுக்கு கட்டுப்படும் இந்த கூட்டம் அவருக்காக எதையும் செய்ய துணிந்தவர்கள். 

விஜய் படம் ரிலீஸ் என்றால் போதும் அதை திருவிழாவாக கொண்டாடும் இந்த ரசிகர்கள், அவரது பெயரில் பல சமுதாய தொண்டுகளையும் செய்து வருகின்றனர். 

இந்த ரசிகர்கள் விஜய்க்காக செய்யும் பல நல்ல விஷயங்கள் இணையத்தில் கூட வைரல் ஆகி பாராட்டுக்களை பெற்றிருக்கிறது. 

அந்த வகையில் விஜயின் குட்டி ரசிகர் செய்திருக்கும் க்யூட் ஆன செயல் ஒன்று தற்போது இணையத்தில் பிரபலமாகி இருக்கிறது.

பொதுவாக பரீட்சையின் போது கேட்கப்படும் கேள்விகளுக்கு குழந்தைகள் விடையளிக்கும் விதமே வித்தியாசமானதாக தான் இருக்கும். 

அந்த வகையில், 5ஆம் வகுப்பு படிக்கும் இந்த மாணவனிடம் தமிழ் பரீட்சையின் போது ”நீ விரும்பும் தலைவர்களுள் ஒருவர் பற்றி கட்டுரை வரைக என கேட்கப்பட்டிருக்கிறது. 

இதற்கு அந்த மாணவன்.” நான் விரும்பும் தலைவர் விஜய்.அவர் அழகாக இருப்பார்”  என எழுதி இருக்கிறார். இந்த விடைத்தாள் தான் தற்போது இணையத்தில் வைரல் ஆகி இருக்கிறது.  

இந்த குட்டி ரசிகனின் க்யூட்டான இந்த பதிலை பார்த்துவிட்டு , விஜய்க்கு இப்படி ஒரு குட்டி ரசிகனா என வியந்திருக்கின்றனர் விஜய் ரசிகர்கள்.

இந்த க்யூட் பதிலால் அந்த மாணவன் ரசிகர்கள் மத்தியில் பிரபலமடைந்திருந்தாலும் , பள்ளியில் கண்டிப்பாக திட்டு தான் வாங்கி இருப்பார் எனவும் பரிதாபப்பட்டிருக்கின்றனர் வேறு சிலர்.