தீபாவளி ட்ரீட்டாக திரைக்கு வந்த விஜய்யின் பிகில் திரைப்படம் வசூலில் பல சாதனைகளை செய்து வருகிறது. இதையடுத்து கைதி புகழ் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில்  தளபதி 64 படத்தில் நடித்து வருகிறார். அதில் விஜய்க்கு ஜோடியாக மாளவிகா மோகனும், வில்லனாக விஜய் சேதுபதியும் நடித்துள்ளனர். 

இதுமட்டுமின்றி ஆண்ட்ரியா, ஸ்ரீமன், '96' புகழ் கவுரி கிஷான், 'பவி டீச்சர்' பிரிகிடா, வி.ஜே.ரம்யா, சாந்தனு, மலையாள நடிகர் ஆண்டனி வர்கீஸ், சேத்தன், சஞ்சீவ், பிரேம் என  நட்சத்திர பட்டாளங்களின் பட்டியல் நீண்டு கொண்டே செல்கிறது. இந்தப் படத்திற்கு ராக் ஸ்டார் அனிருத் இசையமைக்க உள்ளார். 

சென்னை மற்றும் டெல்லியில் ஷூட்டிங் நடைபெற்ற நிலையில், கர்நாடகாவில் உள்ள சிவமோகாவில் நடைபெற்று வந்த நான்கால் கட்ட ஷூட்டிங்கும்  வடசென்னை படத்திற்கு பிறகு தளபதி 64 படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார் ஆன்ட்ரியா. தளபதி 64 படம் குறித்து பேட்டி ஒன்றில் பேசியுள்ள ஆன்ட்ரியா, தளபதி விஜய்யைப் பற்றி ஆகா, ஓஹோ என புகழ்ந்து தள்ளியுள்ளார். 

அதில், "தளபதி 64" படத்தில் எனது கதாபாத்திரம் குறித்து எதுவும் சொல்ல முடியாது. லோகேஷ் கனகராஜ் அந்த படத்தை இயக்கும் விதம் மிகவும் அற்புதமாக உள்ளது. "தளபதி 64" படத்தில் விஜய்யின் நடிப்பை பார்த்து வியந்து போனேன். அவர் ஒரு சூப்பர் ஸ்டார். ஒரு படத்தில அவர் கூட நடிச்சதிலேயே, அவருடைய தீவிர ரசிகையா மாறிட்டேன்" என்று குறிப்பிட்டுள்ளார்.