இனியும் தலைமுடிக்கும் தாடிக்கும் துல்லியமாக கருப்பு டை அடித்துக் காலம் தள்ள முடியாது என்று நினைத்தோ என்னவோ தனது புதிய படத்தின் சில காட்சிகளில் தல அஜீத் ஸ்டைலில் சால்ட் அண்ட் பெப்பர் ஸ்டைலில் நடிக்கவிருப்பதாக அப்பட வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. 

தற்போது 48 வது வயதில் இருக்கும் அஜீத் கடந்த ஏழெட்டு வருடங்களாகவே ரஜினி ஸ்டைலில் தனது தோற்றத்தைப் பற்றி கவலைப்படாமல், குறிப்பாக தாடி மீசைக்கு டை அடிக்காமல் படத்திலும் பொது இடங்களிலும் தோன்ற ஆரம்பித்தார். ஆனால் அவரை விட மூன்றே வயது இளையவரான விஜய் இன்னும் படங்களிலும் நேரிலும் ஒரு காலேஜ் ஸ்டூடண்ட் எஃபெக்டிலேயே நடமாடி வருகிறார்.

இந்நிலையில் அட்லி இயக்கத்தில் நடித்து ‘விஜய் 63’ படத்தின் சில காட்சிகளில் அஜீத் போலவே சால்ட் அண்ட் பெப்பர் தோற்றத்துக்கு விஜய் மாறியிருப்பதாகவும், ‘விஸ்வாசம்’ படத்தில் நரைத்த தலைமுடி, மீசை, தாடியுடன் தோன்றிய அஜீத்துக்குக் கிடைத்த அபார வரவேற்புதான் விஜயின் இந்த மனமாற்றத்துக்குக் காரணம் என்றும் சொல்லப்படுகிறது. அச்செய்தியை ஓரளவு உறுதிசெய்யும் வகையில் ஒரு திருமண இல்லத்திற்கு அதே தோற்றத்தில் தலையைக் காட்டினார் விஜய்.