பிகில் பட ரிலீசின் போது நடந்த சின்ன சின்ன குளறுபடிகளுக்கு காரணம் தயாரிப்பு நிறுவனமான ஏ.ஜி.எஸ்தான் என்கிற முடிவுக்கு வந்துவிட்டாராம் விஜய். இதனால் அந்த படக் கம்பெனி மீது தீராத அதிருப்தியில் இருப்பதாகவும் தகவல்.

ஏன்? சில முக்கியமான ஏரியாவிலிருந்து சொன்னபடி கடைசி பேமென்ட் வரவில்லை. வந்தால்தான் படத்தை வெளியிடுவேன் என்று உறுதியோடு இருந்துவிட்டது தயாரிப்பு நிறுவனம். இதுபோன்ற நேரங்களில் ஹீரோவின் பெயர் கெட்டுவிடும் என்பதால், வராத பணத்தை பிறகு வாங்கிக் கொள்வதாக எழுதி வாங்கிக் கொண்டு ரிலீஸ் செய்துவிடுவதுதான் வழக்கம். ஆனால், இந்த விஷயத்தில் ஏ.ஜி.எஸ் நிறுவனம் கறாராக இருந்துவிட்டது.

இதனால் பல ஊர்களில் சொன்ன நேரத்தில் காட்சிகள் துவங்கப்படாததால் கலவரம்... ஆர்ப்பாட்டம்... பொது சொத்துக்களுக்கு சேதம். ரசிகர்கள் கைது செய்யப்பட்டனர். எல்லா கெட்ட பெயரும் தன் தலையில்தான் விழும் என்பதை அறியாதவரா விஜய்? அதனால்தான் விஜய் கோபமும், அதிருப்தியுமாக இருப்பதாக கூறுகிறார்கள்.