GOAT படத்தில் நடித்ததற்கு இது கைமாறா? பிரஷாந்துடன் கைகோர்த்த பிரபு தேவா.. தளபதி செய்யப்போகும் உதவி!

நடிகர் பிரசாந்த் நடிப்பில் உருவாகியுள்ள 'அந்தகன்' படத்தில் இடம் பெற்றுள்ள தி அந்தகன் அந்தம் என்கிற பாடலை தளபதி விஜய் வெளியிட உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
 

Vijay help to Actor Prashanth movie Andhagan mma

விஜய், அஜித், போன்ற நடிகர்கள் தங்களை தமிழ் சினிமாவில் இளம் நடிகர்களாக நிலை நிறுத்திக் கொள்ள தடுமாறிய காலத்திலேயே, அடுத்தடுத்து வெற்றி படங்களை கொடுத்து கோலிவுட் திரையுலகையே தன் பக்கம் திரும்பி பார்க்க வைத்தவர் இயக்குனரும், நடிகருமான தியாகராஜனின் மகனான பிரசாந்த். சமீப காலமாக இவர் நடிப்பில் வெளியான அனைத்து படங்களும் படுத்து விட்டதால்... இவர் நம்பி இருக்கும் திரைப்படம் 'அந்தகன்'.

இந்த படத்தில் நீண்ட இடைவேளைக்கு பின்னர், ஹீரோவாக நடித்துள்ளார். இந்த படத்தின் படப்பிடிப்பு பணிகள் கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பே முடிந்துவிட்ட நிலையில், ஒரு சில பிரச்சினைகள் காரணமாக ரிலீஸ் தேதி தாமதம் ஆகிக்கொண்டே கொண்டே சென்றது. இந்நிலையில் ஆகஸ்ட் 15ஆம் தேதி, இந்த படம் ரிலீஸ் ஆகும் என படக்குழு அறிவித்துள்ளது. இயக்குனர் பா ரஞ்சித் இயக்கத்தில், விக்ரம் நடித்துள்ள 'தங்கலான்' திரைப்படத்திற்கு போட்டியாக வெளியாக உள்ளது.

Vijay help to Actor Prashanth movie Andhagan mma

மிகப்பெரிய எதிர்பார்ப்புக்கு மத்தியில் வெளியாகவுள்ள இந்த படத்தின், இடம்பெற்றுள்ள 'தி அந்தகன் அந்தம்' பாடலை தளபதி விஜய் வெளியிட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த படத்தில் நடன இயக்குனராக பணியாற்றியுள்ள பிரபு தேவாவும் தற்போது வெளியாகியுள்ள போஸ்டரில் உள்ளார். 'கோட்' படத்தில் பிரஷாந்த் நடித்ததற்கு கைம்மாறு செய்யும் விதமாக தான் தளபதி, அந்தகன் பாடலை வெளியிடுகிறாரா? என ரசிகர்கள் கேள்வி எழுப்பி வருகிறார்கள்.   

Boat: யோகி பாபுவின் அசத்தலான டான்ஸ் மூமென்ட்டுடன் 'BOAT' படத்திலிருந்து வெளியான வாடா வா ப்ரோமோ பாடல்!

பிரசாந்த் நடிப்பில் வெளியாக உள்ள 'அந்தகன்' திரைப்படம் பாலிவுட்டில் வெளியாகி மிகப்பெரிய வெற்றி பெற்ற அந்தாதும் படத்தின் ரீமேக்காக எடுக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. இந்த படத்தை பிரசாந்தின் தந்தையான தியாகராஜன் தான் இயக்கி தயாரித்துள்ளார். இப்படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார்.  சிம்ரன், பிரியா ஆனந்த், கார்த்திக் முத்துக்குமரன், சமுத்திரகனி, யோகி பாபு, ஊர்வசி, கே எஸ் ரவிக்குமார், வனிதா விஜயகுமார், லீலா சாம்சன், பூவையார், மனோபாலா, உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

Vijay help to Actor Prashanth movie Andhagan mma

இப்படத்திற்கு பிரபுதேவா நடனம் அமைத்துள்ள இப்படத்திற்கு, ரவி யாதவ் ஒளிப்பதிவு செய்துள்ளார். மேலும் சதீஷ் சூர்யா இப்படத்திற்கு படத்தொகுப்பு செய்துள்ளது குறிப்பிடத்தக்கது. மிகப்பெரிய எதிர்பார்ப்புக்கு மத்தியில் இப்படம் இப்படம் ஆகஸ்ட் 15-ஆம் தேதி வெளியாக உள்ளது. அந்தகன் அந்தம் பாடல் ஜூலை 24-ஆம் தேதி வெளியாக உள்ளது.

கையை மீறி போயிடுச்சு! கேன்சர் கல்லீரலில் பாதித்து ICU-வில் இருக்கும் விஜய் டிவி நடிகர் - ஷாக் கொடுத்த மகள்!

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios