vijay have lots of crores own
தளபதி விஜய்யின் மொத்த சொத்து மதிப்பு குறித்த தகவல்கள் வெளியாகியுள்ளது.
படத்தில் மட்டுமே தொடர்ந்து வசனம் பேசி வரும் விஜய், அவருக்கென ரசிகர்கள் மத்தியில் தனி இடத்தை பிடித்துள்ளார்
மெர்சல் படம் மூலம் உலக அளவில் அனைவரின் கவனத்தை ஈர்த்த விஜய், மெர்சல் வெற்றிக்கு பேராதரவு கொடுத்த அனைவர்க்கும் நன்றி தெரிவித்து உள்ளார்.
ஆனால் இது குறித்து செய்தியாளர்களை கூட சந்திக்காமல் அமைதியாக குட்டையை குழப்பி விட்டு அமைதியாக வேடிக்கை பார்த்து வருகிறார்.
இதனிடேயே மெர்சல் வெற்றியை அடுத்து விஜயின் சொத்து மதிப்பு என்ன என்பதை பலரும் தெரிஞ்சிக்க ஆவலாக உள்ளனர்
அதற்கேற்றார் போல் விஜய் மொத்த சொத்து மதிப்பு தற்போது வெளியாகி உள்ளது.

25ஆண்டு திரையுலகில் ஹீரோவாக நடித்து அதன் மூலம் இதுவரை அவர் சம்பாதித்த சொத்து விவரம் பார்க்கலாமா?
மொத்த சொத்து மதிப்பு -ரூ. 420 கோடியாகும்.
ஒருபடத்தில் நடிக்க இவர் பெரும் சம்பளம்- ரூ. 26 கோடி.
தனிப்பட்ட முதலீடுகள் - ரூ. 95 கோடி
தனிப்பட்ட முதலீடுகள் மூலமாக இவருக்கு, 95 கோடி வருமானமும் கிடைக்கிறதாம்.
விளம்பர ஒப்பந்தங்கள் மூலம் -ரூ. 2.5 கோடி பெறுகிறார். அதுவும் விளம்பரத்திற்கு ஏற்ப தொகையும் மாறுபடும்
அபார்ட்மென்ட்ஸ்
சென்னை அபுசாலி தெருவில் விஜய்க்கு சொந்தமாக பல இடங்கள் உள்ளன.அனைத்தையும் வாடகைக்கு விடப்பட்டு உள்ளது.இதன் மூலம் பல லட்சம் வருமானம் வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது
