கேரள நடிகர்களை விட இங்கு அதிக செல்வாக்குடன் இருப்பவர் தமிழ் நடிகர் விஜய்தான் என்று மலையாள தொலைக்காட்சி ஒன்றில் கேரள எம்.எல்.ஏ.வே  பேசியிருப்பது பெரும் சர்ச்சைகளை உண்டாக்கியிருக்கிறது. அவரை மம்முட்டி, மோகன்லால் உட்பட்ட மலையாள நட்சத்திரங்களின் ரசிகர்கள் வறுத்தெடுத்து வருகின்றனர்.

கோட்டயம் மாவட்டம் பூஞ்சார் தொகுதியில் ஆறாவது முறையாக எம்.எல்.வாக தேர்ந்தெடுக்கப்பட்டிருப்பவர் பி.சி. ஜார்ஜ். சில தினங்களுக்கு முன்பு நடந்த தொலைக்காட்சி விவாதம் ஒன்றில் பங்கெடுத்த ஜார்ஜ், விவாதத்தில் கலந்துகொண்ட மற்றொரு பிரமுகருக்குப் பதில் அளிக்கும்போது, 
 தியேட்டர்களில் விஜய் கட்அவுட்டிற்கு ரசிகர்கள் பால் அபிஷேகம் செய்வதை நான் உள்பட பலர் பார்த்துள்ளோம். உண்மையில் கேரளாவில் மலையாள நடிகர்களை விட விஜய்க்கு ரசிகர்கள் அதிகம் என சற்றும் தயக்கமின்றி தெரிவித்தார்.

எம்.எல்.வின் அந்தப் பேச்சு மலையாள நடிகர்களை குறிப்பாக நீண்டகாலமாக முன்னணி நடிகர்களாகவே நீடித்து வரும் மம்முட்டி, மோகன்லால் ஆகிய இருவரையும் அசிங்கப்படுத்துவதாக உள்ளது என்றும், அவர்களை அவதூறு செய்ததற்கு எம்.எல்.ஏ ஜார்ஜ் மன்னிப்புக் கேட்க வேண்டும் என்றும் மலையாள ரசிகர்கள் குரல் எழுப்பி வருகின்றனர்.

இன்னொரு பக்கம் விஜய் ரசிகர்கள் இச்செய்தியை 
Thalapathy Vijay @Thalapa32231771 #PCGeorge talk about #Thalapathy mass in kerala more than malayalam actors...10:03 PM - Feb 10, 2019 என்று பெருமையுடன் பகிர்ந்து வருகிறார்கள்.