தளபதி விஜய் நடிப்பில் வெளியான மெர்சல் திரைப்படம் கடந்த ஆண்டு கோலிவுட்டில் மாஸ் ஹிட் கொடுத்தது. மெர்சல் திரைப்படம் பல தடைகளை தகர்த்தெறிந்துவிட்டு தான் திரைக்கே வந்தது. இந்த திரைப்படம் ரீலீசான போதே ரசிகர்களுக்கு தெரிந்துவிட்டது, மெர்சல் திரையில் இன்னும் பல சாதனைகளை படைக்கப்போகிறது என்று .

ரசிகர்களின் அந்த எதிர்பார்ப்பினை எல்லா வகையிலுமே பூர்த்தி செய்திருக்கிறது மெர்சல் திரைப்படம்.

இந்த திரைப்படத்தில் விஜய் மூன்று மாஸான வேடங்களில் நடித்திருந்தார். அதிலும் மேஜிசியனாக நடிப்பதற்காக சிறப்பு பயிற்சிகளை கடுமையாக மேற்கொண்டு அசத்தலாக நடித்திருந்தார் தளபதி. அவரின் அந்த கடும் உழைப்பிற்கு தற்போது பலன் கிடைத்திருக்கிறது. சர்வதேச அளவில் நடக்கும், IARA விருதுகள் வழங்கும் நிகழ்வில், சிறந்த நடிகருக்கான பிரிவில், மெர்சல் திரைப்படத்திற்காக விஜயின் பெயர் பரிந்துரை செய்யப்பட்டிருந்தது.
சிறந்த நடிகருக்கான இந்த பட்டியலில், சர்வதேச அளவிலான நடிகர்கள் பலரின் பெயரும் பரிந்துரை செய்யப்பட்டிருந்தது. 

டேனியல் கலுயா(கெட் அவுட்), டேவிட் டென்னன்ட்(டான் ஜுவான் இன் சோஹோ), ஜான் பொயேகா(ஸ்டார் வார்ஸ்: தி லாஸ்ட் ஜெடி), ஜாக் மோரிஸ் (ஈன்ஸ்ட்என்டர்ஸ்), ஜேமி லோமாஸ் (ஹோலிஓக்ஸ் கிறிஸ் அட்டோ(ஸ்விங்), ஜாக் பெர்ரி ஜோன்ஸ்(பாங்), என பல சர்வதேச நடிகர்களின் பெயரும் இந்த பிரிவில் இருந்தது. அதில் மெர்சல் திரைப்படத்திற்காக விஜயின் பெயர் தான் , சிறந்த நடிகருக்கான விருதினை வென்றிருக்கிறது. 

இதனால் விஜய் ரசிகர்கள் உச்ச கட்ட மகிழ்ச்சியில் இந்த நல்ல செய்தியை கொண்டாடி வருகின்றனர். சர்வதேச அளவிக் சிறந்த நடிகருக்கான விருது ஒரு தமிழ் நடிகருக்கு கிடைத்திருப்பது மிகவும் பெருமைப்பட வேண்டிய விஷயம் என விஜயை புகழ்ந்திருக்கின்றனர் கோலிவுட் வட்டாரத்தினர்.