டெல்லி போற போட்டோவுக்கே இவ்வளவு லைக்குன்னா... பட வெளியான என்ன ஆகும்... மீண்டும், மீண்டும் அதிரடி காட்டும் விஜய் மாஸ்...!

தீபாவளி ட்ரீட்டாக திரைக்கு வந்த ‘பிகில்’ திரைப்படம் கலவையான விமர்சனங்களைப் பெற்றாலும், வசூலில் அதிரடி காட்டி வருகிறது. அட்லீ இயக்கத்தில் வெளியான‘பிகில்’ திரைப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. இதனையடுத்து மாநகரம், கைதி படங்களின் இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில்‘தளபதி 64’படத்தில் நடித்து வருகிறார் விஜய். மாறுபட்ட கதை, ஹாலிவுட் தரத்திலான காட்சி அமைப்புகள் என முற்றிலும் புதுமையான யோசனைகளைக் கொண்ட லோகேஷ் கனகராஜ், ‘தளபதி 64’ படத்தை மிகப்பெரிய அளவில் வெற்றி பெறச் செய்வார் என ரசிகர்கள் ஆர்வமாக எதிர்பார்த்து வருகின்றனர். 

சேவியர் பிரிட்டோ தயாரித்து வரும் படத்திற்கு அனிருத் ரவிச்சந்திரன் இசையமைக்கிறார். விஜய் சேதுபதி, ஆண்ட்ரியா, கெளரி கிருஷ்ணன், சாந்தனு என பெரிய நட்சத்திர பட்டாளமே ‘தளபதி 64’படத்தில் நடித்து வருகிறது. அக்டோபர் முதல் வாரத்தில் பூஜையுடன் ஆரம்பித்த ‘தளபதி 64’ படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு,  22 நாட்களுக்குப் பிறகு நிறைவடைந்துள்ளது. இந்நிலையில் இரண்டாம் கட்ட படப்பிடிப்பு டெல்லியில் தொடங்க உள்ளதாக தயாரிப்பு நிறுவனம் அறிவித்திருந்தது. இதில் பங்கேற்பதற்காக நடிகர் விஜய் சென்னை விமான நிலையம் சென்ற புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வெற லெவலுக்கு ட்ரெண்டாகி வருகிறது. நேற்று சென்னை விமான நிலையம் சென்ற விஜய்யை அதிகாரி ஒருவர் சோதிப்பது, விமானத்திற்குள் நுழைந்த விஜய் இருக்கையில் அமர்வது போன்ற புகைப்படங்கள் வைரலாகி வருகின்றன. 

‘தளபதி 64’அடுத்த ஆண்டு கோடை விடுமுறை ஸ்பெஷலாக ஏப்ரல் 9ம் தேதி ரிலீஸ் ஆகும் என தயாரிப்பு நிறுவனம் அறிவித்துள்ள நிலையில், படம் குறித்த சின்ன சின்ன அறிவிப்புகள் கூட சோசியல் மீடியாவில் தீயாக பரவி வருகிறது. இதனால்‘தளபதி 64’ படத்தை விரைவில் திரையில் காணும் ஆர்வம் ரசிகர்களுக்கிடையே அதிகரித்துள்ளது.