தளபதி விஜய், கடந்த சில வருடங்களாகவே தான் ஒரு படம் நடித்து முடித்தால், அந்த படத்தில் தன்னுடன் பணியாற்றிய பிரபலங்களுக்கு விருந்து வைத்து, மகிழ்விப்பதோடு, தங்க காசு கொடுப்பதையும் வாடிக்கையான வைத்துள்ளார்.

இந்த பழக்கத்தை, தற்போது விஷால், கீர்த்தி சுரேஷ், உள்ளிட்ட சில நடிகர் நடிகைகள் கூட கடைபிடித்து வருகின்றனர். ஆனால் இந்த முறை, விஜய் படக்குழுவினர் சற்றும் எதிர்பாராத பரிசு ஒன்றை கொடுத்து அசத்தியுள்ளார். 

'சர்கார்' படத்தை தொடர்ந்து, விஜய் மூன்றாவது முறையாக  அட்லி இயக்கத்தில் இணைந்த திரைப்படம் 'பிகில்'. இந்த படத்தின் படப்பிடிப்பு கடந்த சில மாதங்களாக நடைபெற்று வரும் நிலையில்,  விஜய் சம்பந்தப்பட்ட படப்பிடிப்பு காட்சிகள் நேற்றுடன் நிறைவு பெற்றது.

படப்பிடிப்பின் கடைசி நாளான நேற்று, எப்போதும் போல் தன்னுடன் நடித்த நடிகர்கள் மற்றும் படக்குழுவினரை கௌரவித்தார் விஜய். எப்போதும் படக்குழுவினருக்கு தங்க காசு கொடுப்பதை வழக்கமாக வைத்திருக்கும் அவர்,  இந்த முறை பிகில், என ஆங்கிலத்தில் பெயர் பொறிக்கப்பட்ட தங்க மோதிரத்தை பரிசாக வழங்கியுள்ளார். சுமார் 400 பேர்களுக்கு தனது கையால் தங்க மோதிரத்தை அவரே அணிவித்ததாக கூறப்படுகிறது. 

இதுகுறித்து இந்த படத்தின் தயாரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தி,  தன்னுடைய சமூக வலைத்தளத்தில் விஜயை மிகவும் பெருமையா பேசி, ட்விட் ஒன்றை போட்டுள்ளார்.