நேற்று மாலை 6 மணிக்கு வெளியான தல அஜீத்தின் ‘நேர்கொண்ட் பார்வை’ வெளியான 18மணி நேரங்களுக்குள் சுமார் 56 லட்சம் பார்வையாளர்களைப் பெற்று சரித்திர சாதனை படைத்திருக்கிறது. அந்த ட்ரெயிலர் குறித்து இந்திப் பட உலகின் முக்கியப் புள்ளிகளெல்லாம்  கமெண்ட் அடித்துக்கொண்டிருக்கும் நிலையில் படு சர்ப்ரைஸாக விஜய் படத் தயாரிப்பாளரும் வாழ்த்தும் பாராட்டும் தெரிவித்துள்ளார். 

’தளபதி 63’ படத்தை கல்பாத்தி .எஸ்.அகோரம் தயாரிக்கிறார். அவரது மகள் கல்பாத்தி எஸ்.அர்ச்சனாதான் இப்படத்தின் நிர்வாகத் தயாரிப்பாளர். தளபதி 63 படம் குறித்து ஏதாவது அப்டேட்ஸ் கிடைக்காதா என்று விஜய் ரசிகர்கள் ஏங்கிக் கிடக்கும் வேளையில் இன்று சற்று முன்னர் தனது ட்விட்டர் பக்கத்தில்,...ஆல் த பெஸ்ட் டைரக்டர் ஹெச்.வினோத். ட்ரெயிலர் மிக அபாரமாக இருக்கிறது’என்று பாராட்டி நேர்கொண்ட பார்வை ட்ரெயிலரையும் தனது பக்கத்தில் டேக் பண்ணியிருக்கிறார்.

இதை அவ்வளவு ஸ்போர்ட்டிவாக எடுத்துக்கொள்ளாத விஜய் ரசிகர்கள்,...இதுக்கு மட்டும் கரெக்டா விஷ் பண்ணு. ஆனா தளபதி 63’க்கு அப்டேட் கேட்டா ப்ரே ஃபார் நேசமணின்னு நக்கல் பண்ணிட்டு எஸ்கேப் ஆயிடு’ என்று கொஞ்சம் கடுப்பாகவே கமெண்ட் அடிக்கிறார்கள்.