Vijay film mersal beat Ajith vivegam collections

பல பிரச்சினைகளை எதிர்க்கொண்ட விஜயின் ‘மெர்சல்’ அத்தனை தடைகளை தகர்த்தெரிந்து அறிவித்தது போல தீபாவளியன்று வெளியானது. வனவிலங்கு வாரியத்தின் எதிர்ப்பால், எங்கே படம் தீபாவளிக்கு ரிலிஸாகாமல் போய்விடுமோ! என்று விஜய் ரசிகர்கள் அச்சப்பட்ட நிலையில், நேரடியாக களத்தில் இறங்கிய விஜய், முதல்வர் எடப்பாடி பழனிச்சாமையை சந்தித்த மறுநாளே, வனவிலங்கு வாரியத்தின் அவசர கூட்டம் நேற்று காலை நடைபெற்றது. இந்த கூட்டத்தில் ‘மெர்சல்’ படத்திற்கு தடையில்லா சான்றிதழ் வழங்கியது.

அதேபோல, இந்த சான்றிதழை சென்சார் குழுவுக்கு படக்குழு வழங்கியதை தொடர்ந்து, தீபாவளிக்கு முந்தைய நாள் தான் சுமார் 11 மணியளவில் ‘மெர்சல்’ படத்திற்கு சென்சார் சான்றிதழ் வழங்கப்பட்டது. இதனால், படமும் சொன்னது போல் தீபாவளிக்கு உலகம் முழுவதும் பிரமாண்டமாக வெளியானது. சென்னையில் உள்ள சில திரையரங்குகளில் சென்சாருக்கு முந்தைய நாள் இரவே நான்கு நாட்களுக்கு உண்டான அனைத்து டிக்கெட் தீர்ந்தது.



படத்திற்கு ரசிகர்களிடம் கிடைத்துள்ள ஏகோபித்த வரவேற்பால் வசூலி விஜய் தெறிக்க விட, அஜித் ரசிகர்கள் மெர்சலாகி கிடக்கிறார்கள். சில அஜித் ரசிகர்கல் மெர்சல் படம் குறித்து எதிர்மறையான கருத்துக்களை சமூக வலைதளங்களில் பரப்பி வருகின்றனர். இருந்தாலும், படத்தை பார்க்கும் அனைவரும், சூப்பர்... செம்ம... வேற லெவல் என்று கூறுகின்றனர். அதற்கு ஏற்றவாறு, படம் ரிலீஸான முதல் நாளில், பாகுபலி சாதனையை முறியடித்த அஜித்தின் விவேகம் படத்தின் வசூல் சாதனையை ‘மெர்சல்’ முறியடித்துவிட்டது.

விவேகம் படம் ரிலீஸான அன்று சென்னையில் ரூ. 1. 21 கோடி வசூலித்தது. விஜய்யின் மெர்சல் விவேகத்தை முந்தி ரூ. 1.48 கோடி வசூல் செய்துள்ளது. அமெரிக்காவில் ரிலீஸான அன்று மற்றும் ப்ரீமியர் ஷோக்கள் மூலம் மெர்சல் படம் ரூ. 3.08 கோடி வசூல் செய்து சாதனை படைத்துள்ளது. ஆஸ்திரேலியா, இங்கிலாந்திலும் நல்ல வசூல் செய்துள்ளது.