தளபதி விஜய்யின் தந்தை, எஸ். ஏ.சந்திரசேகர் கடந்த சில நாட்களுக்கு முன் விஜய் மக்கள் இயக்கம் பெயரில் அரசியல் கட்சியை தொடங்கியுள்ளதாக அறிவித்து பரபரப்பை ஏற்படுத்தினார். இதுகுறித்து விஜய் தரப்பில் இருந்து, இந்த கட்சிக்கும் தனக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்று தளபதி தெரிவித்தார் என்பது நாம் அறிந்ததே.

இந்த அரசியல் கட்சி பற்றிய தகவல் வெளியான போது ஆரவாரம் செய்த ரசிகர்கள், விஜய் தன்னுடைய ரசிகர்கள் யாரும் அந்த கட்சியில் இணைய வேண்டாம் என விஜய் அறிக்கை விட்டதால், ரசிகர்கள் யாரும் கண்டுகொள்ளவே இல்லை.

இந்த நிலையில் எஸ்.ஏ.சி கட்சியின் தலைவர் என அறிவிக்கப்பட்ட பத்மநாபன் தலைவர் பதவியை ராஜினாமா செய்வதாக தெரிவித்தார். ஏற்கனவே, பொருளாளர் என அறிவிக்கப்பட்ட ஷோபா சந்திரசேகர்  கட்சியிலிருந்து விலகி விட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது. 

இந்நிலையில் சென்னை வடபழனியில் இன்று நடைபெற்ற கொரோனா நிவாரணம் வழங்கும் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட எஸ்.ஏ.சியிடம்  கட்சியிலிருந்து தலைவரே விலகியது குறித்து பத்திரிகையாளர்கள் கேள்வி எழுப்பினர்.  இதற்கு பதிலளித்த அவர் ’யார் இருந்தாலும் இல்லாவிட்டாலும் கட்சியை தொடர்ந்து நடத்துவேன் என்று அதிர்ச்சிகொடுத்துள்ளார்.

மேலும் அரசியல் கட்சி ஆரம்பிக்கும் போது மிரட்டல் வரும் என்றும், ஆளுங்கட்சிக்கு ஆதரவாக எப்போதுமே நான் இருந்ததில்லை என்றும் எதிர்நீச்சல் போடுவதை தான் விரும்புவதாகவும் எஸ்.ஏ.சி ஆவேசமாக தெரிவித்துள்ளார்.