கோலிவுட் முன்னணி நட்சத்திரங்களில் ஒருவராய் மின்னிக்கொண்டிருக்கும், தல அஜித்தின் 49 ஆவது பிறந்தநாள் இன்று. தற்போது ஊரடங்கு உத்தரவு இந்தியா முழுவதும் கடைபிடிக்கப்பட்டு வருவதால், எப்போதும் போல் இவருடைய பிறந்தநாளை பிரமாண்டமாக தல ரசிகர்கள் கொண்டாடா விட்டாலும், சமூக வலைத்தளங்களில் அமர்க்களம் செய்து வருகிறார்கள்.

குறிப்பாக பிரபலங்கள் பலர் வந்து பஞ்சாயத்து பண்ணும் அளவிற்கு முட்டி கொண்ட, விஜய் - அஜித் ரசிகர்கள், திடீர் என ஒற்றுமையாய் மாறி, அஜித்துக்கு  தங்களுடைய பிறந்தநாள் வாழ்த்துக்களை கூறி வருவது பலரையும் ஆச்சர்யப்படுத்தியுள்ளது.

#NanbarAjith என்கிற ஹாஷ்டாக் மூலம் தங்களுடைய வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள். இந்த ஹாஷ்டாக் தற்போது சமூக வலைத்தளத்தில் ட்ரெண்டாகி வருகிறது. 

விஜய் ரசிகர்கள் மற்றும் அஜித் ரசிகர்களின் இந்த திடீர் நெருக்கம் பார்பவர்களையே பிரமிக்க வைத்துள்ளது என்றால் பார்த்து கொள்ளுங்கள். 

ரசிகர்களை கடந்து, பிரபலங்கள் பலருக்கு தல அஜித்துக்கு தங்களுடைய பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள். 

மேலும் தல ரசிகர்கள், அஜித்தின் பிறந்தநாளை பிரமாண்டமாக கொண்டாட முடியவில்லை என்றாலும், முடிந்த வரை ஏழை எளிய மக்களுக்கு உதவிகள் செய்து கொண்டாட திட்டமிட்டுள்ளனர் என்று கூறப்படுகிறது.