‘சர்கார்’ படத்தின் முதல் இரு தினங்கள் வசூல் ஓரளவு ஓ.கே. என்றாலும் படத்தை பொதுமக்கள் ஏற்றுக்கொண்ட அளவு கூட விஜய்யின் தீவிர ரசிகர்கள் ஏற்றுக்கொள்ளவில்லை என்கிறது படத்தை வாங்கிய விநியோகஸ்தர் தரப்பு ரிப்போர்ட். முக்கியமாக படத்தின் க்ளைமேக்ஸில் தன் கைக்கு வந்த முதல்வர் பதவியை சகாயம் ஐ.ஏ.எஸ் போன்று உருவாக்கப்பட்ட கேரக்டருக்கு தாரை வார்த்ததை விஜய் ரசிகர்கள் சுத்தமாக விரும்பவில்லையாம்.

‘சர்கார்’ க்ளைமேக்ஸில் 234 தொகுதிகளில் வேட்பாளர்களை நிறுத்தும் 210 தொகுதிகளில் ஜெயிக்கிறார். ஆனால் முதல்வர் பதவியில், அட்லீஸ்ட் படத்திலாவது உட்காரவேண்டிய விஜய் ‘நான் எதிர்க்கட்சிக்காரனா இருந்து கேள்வி கேக்குற இடத்துல இருந்தாதான் ஆளுங்கட்சிக்கே ஒரு பயம் இருக்கும்’என்றபடி, தனது வெற்றிபெற்ற வேட்பாளர்களில் ஒருவரான கலெக்டரை முதல்வராக்கி விட்டு ஒதுங்கிக்கொள்கிறார்.

இந்தக் காட்சியை படம் எடிட்டிங் தருணத்தில் இருந்த போதே, ரசிகர்கள் ஏற்றுக்கொள்ளமாட்டார்கள் என்று கூறி, விஜயின் தந்தை எஸ்.ஏ.சி. தடுத்து நிறுத்த முயற்சித்தாராம். ஆனால் இயக்குநர் முருகதாஸ் பிடிவாதமாக இருந்து தான் நினைத்ததை சாதித்திருக்கிறார்.

தற்போது தியேட்டர்களிலிருந்து வரும் ரிசல்டுகளின்படி, சுமார் 75 சதவிகித விஜய் ரசிகர்கள், கதைப்படி  அவர் முதல்வராக முடிசூட்டியிருக்கவேண்டும். இப்படி பதவியை இன்னொருவருக்கு விட்டுக்கொடுத்தால் நாளை அரசியலுக்கு வரும்போது மக்கள் எப்படி நம்பி ஓட்டுப்போடுவார்கள் என்று புலம்புகிறார்களாம்.