vijay fans trolled director Praveen kanth regards Comment vijay

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக இருக்கக்கூடியவர் விஜய். விஜயின் நடிப்பில் கடந்த தீபாவளியன்று வெளியான மெர்சல் படத்தால் இந்தியா முழுவதும் மிகப்பெரிய பிரபலமாக மாறிவிட்டார். இளையதளபதியாக இருந்த விஜய் மெர்சல் படத்தின் மூலம் தளபதியாக ப்ரோமோஷன் ஆகிவிட்டார். 

தற்போது தளபதி விஜய்யின் கால்ஷிட்டை எதிர்நோக்கி பல தயாரிப்பு நிறுவனங்கள் காத்திருக்கின்றது. இந்த நிலையில் நேற்று சமூக வலைத்தளத்தில் ஒரு செய்தி ரசிகர்களை மிகவும் கோபப்படுத்தியுள்ளது. 

அது வேறு ஒன்றுமில்லை ரட்சகன், ஜோடி, ஸ்டார் உள்ளிட்ட படங்களை இயக்கிய ப்ரவீன் காந்தி சமீபத்தில் ஒரு பேட்டியில் "விஜய் கொக்கக் கோலா கம்பெனி விளம்பரத்திலும் நடிப்பாராம் அதே சமயம் கத்தி படத்தில் அந்த கொகோ கோலா கம்பெனியை எதிர்த்து வீர வசனமும் பேசுவாராம், இது மிகப்பெரிய கேவலமாக இல்லையா, அவரை பார்க்கும் போது எனக்கு கோபம் கோபமாகத்தான் வருகின்றது" என மோசமாக திட்டியுள்ளார். இந்த நிகழ்வு விஜய் ரசிகர்களிடம் மிகவும் கோபத்தை ஏற்படுத்தியுள்ளது.

மேலும், எங்கள் தளபதி விஜய் எப்போதோ நடித்த கோலா விளம்பரத்தை வைத்து அவரை தற்போது விமர்சிப்பது எந்த விதத்திலும் நியாயமில்லை என்றும் ரசிகர்கள் அவருக்கு பதிலடி கொடுத்து வருகின்றனர்.