அஜித்தின் விஸ்வாசம் படமும் ரஜினி நடிக்கும் பேட்ட படமும் ஒரே நேரத்தில் வெளியாவதால் ’கொலவெறி’ மோதல் ஏற்பட்டுள்ளது. ட்ரெய்லரிலும் மோதல் தெறி கிளப்பி வரும் நிலையில் அஜித்தின் சொந்த ஊரில் விஜய், ரஜினி ரசிகர்கள் கெத்து காட்டி வருகின்றனர். 

அஜித்துடன் இயக்குநர் சிவா நான்காவது முறையாக இணையும் படம் விஸ்வாசம். பொங்கலுக்கு வெளியாகவுள்ள நிலையில், இதேநாளில் ரஜினி நடித்த பேட்ட படமும் வெளியாகிறது. இதனால் இருவரது ரசிகர்களுக்கும் பெரும் போட்டி நிலவி வருகிறது. படத்தின் டிரைலர்களும் ஒருவரையொருவர் தாக்கும் வண்ணம் உள்ளது.

விஸ்வாசம் ட்ரெய்லரில் அஜித்தின் சொந்த ஊர், தேனி மாவட்டம், கொடுவிலார்பட்டி என்று அவரே கூறும் வசனம் உள்ளது. இதே ஊரில் சூப்பர்ஸ்டார் ரஜினிக்கு ரசிகர் மன்றத்தை ரசிகர்கள் திறந்துள்ளனர். அதேபோல விஜய்க்கும் ரசிகர் மன்றம் திறந்துள்ளனர். இந்த புகைப்படங்கள் இணையதளத்தில் வைரலாகி வருகிறது.