''பிகில்'' படத்தின் வெற்றியைத் தொடர்ந்து லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடித்து வரும் படம் ''மாஸ்டர்''. கல்லூரி பேராசிரியராக விஜய் நடிக்கும் இந்த படத்தில் அவருக்கு ஜோடியாக மாளவிகா மோகனன் நடித்து வருகிறார். வில்லனாக மக்கள் செல்வன் விஜய் சேதுபதி நடித்து வரும் காட்சிகள் சமீபத்தில் சென்னையில் படமாக்கப்பட்டு வருகிறன. விரைவில் விஜய் - விஜய் சேதுபதி நடிக்க உள்ள மாஸ் பைட் சீன்கள் ஷூட் செய்யப்பட உள்ளன. 

இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் நியூ இயர் கிப்டாக வெளியாகி செம்ம மாஸ் காட்டியது. அப்போது விஜய் ரசிகர்கள் சார்பில் ஒட்டப்பட்ட போஸ்டர் மிகுந்த பரபரப்பை ஏற்படுத்தியது. அதில் "சி.எம். ஆப் தமிழ்நாடு" என விஜய்யை குறிப்பிட்டிருந்தது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. Collection Master என்பதை குறிக்கும் விதமாக விஜய் ரசிகர்கள் போஸ்டர் ஒட்டியிருந்தாலும், கொட்ட எழுத்தில் CM OF TAMILNADU என எழுதப்பட்டுள்ளது பலரது கண்களை உறுத்த ஆரம்பித்தது. 

இந்நிலையில், பொங்கல் விருந்தாக ''மாஸ்டர்'' படத்தின் செகன்ட் லுக் போஸ்டரை படக்குழுவினர் நேற்று முன்தினம் வெளியிட்டனர்.   கண்ணில் ஸ்டைலாக கூலிங்கிளாஸ் அணிந்திருக்கும் விஜய், வாய் மேல் விரல் வைத்து சத்தமே வரக்கூடாது என்பது போல், மிரட்டும் தொனியில் நிற்கும் செகண்ட் லுக் போஸ்டர் தளபதி ரசிகர்களை கொண்டாட்டத்தில் ஆழ்த்தியது. 

இதையும் படிங்க: எம்.ஜி.ஆர். பிறந்த நாளன்று திடீரென ட்ரெண்டாகும் விஜய் ஹேஷ்டேக்... டுவிட்டரை தெறிக்கவிடும் தளபதி ஃபேன்ஸ்... எதற்காக தெரியுமா?

இதையடுத்து #MasterSecondLook என்ற ஹேஷ்டேக்கும் 1 மில்லியன் தடவை ட்வீட் செய்யப்பட்டு உலக அளவில் ட்ரெண்டானது. மாஸ்டர் படக்குழுவினரின் அந்த மகிழ்ச்சியை பிளாஸ்டர் செய்யும் விதமாக விஜய் ரசிகர்கள் ஒட்டியுள்ள போஸ்டர் புது சிக்கலை கொடுத்துள்ளது. 

இதையும் படிங்க: பின்னழகை காட்டி ரசிகர்களை கிறங்கடித்த ராஷ்மிகா மந்தனா... வர்ணிக்க வார்த்தையின்றி தவிக்கும் நெட்டிசன்கள்...!

விஜய்யின் செகன்ட் லுக்குடன் ஒட்டப்பட்டுள்ள அந்த போஸ்டரில் ''234 தொகுதியும் சைலண்டா இருக்கணும்... 2021ல் நாங்க தான் இருக்கணும்... மக்கள் பணி செய்ய வரும்... மாஸ்டர் மாண்புமிகு தளபதி விஜய்...''என்ற வரிகள் இடம் பெற்றுள்ளன. ஏற்கனவே மெர்சல், தெறி, பிகில் என விஜய்யின் அடுத்தடுத்த படங்களுக்கு பிரச்சனைகள் விஸ்வரூபம் எடுத்து வரும் நிலையில், இந்த போஸ்டர் மாஸ்டர் படத்தை என்ன செய்யப்போகுதோ தெரியல.