தளபதி விஜய்க்கு பல வெறித்தனமான ரசிகர்கள் உள்ளனர். அவருக்கு உள்ள மாஸ்ஸை திரைப்படம் வெளியாகும் போது தான் பார்க்க முடியும். படத்தை வரவேற்பதற்காக மேளம், தாளம், வெடி, பாலாபிஷேகம் என பட்டையை கிளப்பி விடுவார்கள்.

தமிழ்நாடு மற்றும் கேரளாவை சேர்ந்த ரசிகர்கள் சிலர்  கோவில் கட்டி கூட வழிபட்டு வருகின்றனர்.

இந்நிலையில், விஜயின் தீவிர ரசிகர்கள் இருவர், தளபதி வாழ்ந்து வரும், அவரின் வீட்டை கோவிலாக நினைத்து கை கூப்பி வாங்கி அதனை புகைப்படமாக எடுத்து ட்விட் செய்துள்ளனர். இந்த புகைப்படம் தற்போது வைரலாக பரவி பார்ப்பவர்களை அதிர்ச்சியாக்கியுள்ளது.