இன்னும் எவ்வளவு பைத்தியக்காரத்தனங்கள் மிச்சம் இருக்கின்றனவோ தெரியவில்லை...’பிகில்’பட வெற்றிக்காக தங்களது முதுகில் அலகு குத்திக்கொண்டு அந்தரத்தில் தொங்கும் பகீர் ரக விஜய் ரசிகர்களின் வீடியோக்கள் வலைதளங்களில் வைரலாகிவருகின்றன. அவர்களது மூடத்தனமான வெறிச்செயலுக்கு பொதுமக்கள் மத்தியில் பலத்த கண்டனங்கள் எழுந்து வருகின்றன.

தீபாவளிக்கு ரிலீஸாகும் பிகில் வெற்றிக்கு மண் சோறு சாப்பிட்டு ஒரு ரசிகர் கூட்டம் மூட நம்பிக்கையை தொடங்கி வைத்திருந்தது. இந்நிலையில் சற்றுமுன்னர் வெளியாகி வலைதளப் பக்கங்களில் வைரலாகிவரும் வீடியோ ஒன்று பார்வையாளர்களை பதட்டத்துக்குள்ளாக்கி இருக்கிறது. தங்களது முதுகில் அலகு குத்திக்கொண்டு அந்தரத்தில் தொங்கும் அவர்களது உயிரைப்பற்றி அவர்கள் கொஞ்சமும் யோசித்ததாகத் தெரியவில்லை.

 

சுபஸ்ரீயின் மறைவை ஒட்டி பேனர் கலாச்சாரமே ஒழிக்கப்படவேண்டும் என்று அத்தனை நடிகர்களும் அறிக்கை வெளியிட்டுள்ள நிலையில் அவை எதையும் மதிக்காமல் இப்படி வெறித்தனமாக உயிருக்கு ஆபத்தான விளையாட்டுகளில் ஈடுபடும் இதுபோன்ற மூடர்களை போலீஸார் கைது செய்து சிறையிலடைக்க வேண்டும். யாருக்காக அலகு குத்தினார்களோ அந்த நடிகரின் படத்தை அல்ல போஸ்டரை கூட பார்க்கவிடாமல் 15 நாட்களாவது புழல் சிறையில் அடைக்கவேண்டும். போகட்டும் விஜயாவது இந்த முட்டாள் தனத்தை கண்டிக்கிறாரா என்று காத்திருந்து பார்ப்போம்.