பீஸ்ட் (Beast) படத்தை தயாரித்து வரும் சன் பிக்சர்ஸ் நிறுவனம் தற்போது வெளியிட்டுள்ள அப்டேட் விஜய் (Vijay) ரசிகர்களுக்கு மிகுந்த ஏமாற்றத்தை தந்துள்ளது.

தமிழ் திரையுலகில் முன்னணி தயாரிப்பு நிறுவனமாக விளங்கி வருவது சன் பிக்சர்ஸ். இந்நிறுவனம் தற்போது நெல்சன் இயக்கத்தில் விஜய் நடிக்கும் பீஸ்ட் படத்தையும், பாண்டிராஜ் இயக்கத்தில் சூர்யா நடிக்கும் ‘எதற்கும் துணிந்தவன்’ (Etharkkum Thunindhavan) படத்தையும் தயாரித்து வருகிறது.

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred

இந்நிலையில், அந்நிறுவனம் இன்று முக்கிய அப்டேட்டை வெளியிட உள்ளதாக அறிவித்திருந்தது. இதையடுத்து மகிழ்ச்சியான விஜய் ரசிகர்கள், அது பீஸ்ட் அப்டேட்டாக தான் இருக்கும் என ஆவலோடு எதிர்பார்த்து காத்திருந்தனர். ஆனால் அந்நிறுவனம் தற்போது சூர்யாவின் (Suriya) எதற்கும் துணிந்தவன் படத்தின் அப்டேட்டை வெளியிட்டுள்ளது. இதனால் விஜய் ரசிகர்கள் மிகுந்த ஏமாற்றம் அடைந்துள்ளனர்.

சன் பிக்சர்ஸ் நிறுவனம் தற்போது வெளியிட்டுள்ள அப்டேட்டின் படி சூர்யாவின் எதற்கும் துணிந்தவன் (Etharkkum Thunindhavan) படத்தின் இரண்டாவது பாடல் நாளை மாலை 6 மணிக்கு வெளியிடப்படும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது. டி. இமான் இசையமைத்துள்ள அப்பாடலை பிரதீப் குமார், வந்தனா ஸ்ரீனிவாசன், பிருந்தா மாணிக்கவாசகம் ஆகியோர் இணைந்து பாடி உள்ளார்களாம். மேலும் இப்பாடல் வரிகளை யுகபாரதி எழுதி உள்ளார்.

எதற்கும் துணிந்தவன் (Etharkkum Thunindhavan) படத்தின் முதல் பாடலான வாடா தம்பி என்கிற பாடல் அண்மையில் வெளியாகி அமோக வரவேற்பை பெற்றிருந்தது. இப்பாடலை அனிருத்தும், ஜிவி பிரகாஷும் இணைந்து பாடி இருந்தனர். எதற்கும் துணிந்தவன் படம் அடுத்தாண்டு பிப்ரவரி மாதம் 4-ந் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது குறிப்பிடத்தக்கது.

Scroll to load tweet…