தளபதி விஜய்யின் ரசிகர்கள், எதிர்பாராமல் நடைப்பெறும் ஒவ்வொரு இயற்கை பேரழிவின் போதும், மக்களுக்கு தங்களால் முடிந்த உதவிகளை செய்து வருகின்றனர். அந்த வகையில் தற்போது கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளில் அவர்கள் ஈடுபட்டுள்ளதை பலரும் பாராட்டி வருகிறார்கள்.

சென்னை மற்றும் தமிழகத்தில் நடக்கும் இயற்க்கை சீற்றங்களின் போது தானாக முன்வந்து, தங்களால் முடிந்த உதவியை செய்பவர்கள் விஜய் ரசிகர் மன்றத்தை சேர்ந்தவர்கள்.

தளபதியின் சந்தோஷத்திலும் மக்களின் கஷ்டங்களிலும் ஒவ்வொரு முறையும் பங்கெடுத்து வரும் இவர்கள், தற்போது உலக நாடுகளையே அச்சுறுத்தி வரும், கொரோனா பாதுகாப்பு பணியிலும் தங்களை ஈடுபடுத்தி கொண்டுள்ளனர்.

அந்த வகையில் சோழிங்கநல்லூரில் உள்ள, விஜய் மக்கள் இயக்கம் சார்பில் அவரது ரசிகர்கள், மக்களுக்கு கொரோனா பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தி வருவதோடு,  நிலவேம்பு கசாயம், மாஸ்க், சானிடைசர்,  போன்றவற்றை கொடுத்துள்ளனர்.

இவர்களின் இந்த நடவடிக்கையை அப்பகுதி மக்கள் வெகுவாக பாராட்டி வருகின்றனர். மேலும் சமூக ஆர்வலர்களும் விஜய் ரசிகர்களின் இந்த முயற்சியை வரவேற்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.