பெண் எழுத்தாளருக்கு விஜய் ரசிகர்கள் போட்ட கிடுக்குப்பிடி... இதை விஜய் எப்படி எடுத்துக்கப் போறாரு...!

விஜய் - அட்லீ கூட்டணியில் வெளி வந்த 3வது படமான "பிகில்", கலவையான விமர்சனங்களை பெற்றாலும் சூப்பர் ஹிட் அடித்துள்ளது. ரஜினியின் "பேட்ட" பட வசூலை கூட பின்னுக்குத் தள்ளி, மாஸ் காட்டி வருகிறது. தமிழ் சினிமாவின் மாஸ் ஹீரோவாக உள்ள விஜய்க்கு "பிகில்" திரைப்படம் ஒரு மறக்கமுடியாத படமாக அமைந்துள்ளது. பெண்கள் புட்பால் அணியை மையமாக வைத்து எடுக்கப்பட்டுள்ள இந்த படத்தில், விஜய் கோச்சாக நடித்துள்ளார். இந்த படத்தை பல்வேறு திரைப்பிரபலங்களும் ஆகா... ஓஹோ என படத்தை புகழ்ந்து தள்ளி வருகின்றனர். சமீபத்தில் "பிகில்" திரைப்படத்தை பார்த்த பிரபல பெண் எழுத்தாளர் ஒருவரும், அதனை பாராட்டி தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதைப் பார்த்த விஜய் ரசிகர்கள், அவங்க கிட்ட கேள்வியா அடுக்க ஆரம்பிச்சிட்டாங்க.

"தி ஹைவே மாஃபியா" என்ற புத்தகத்தின் மூலம் பிரபலமானவர் எழுத்தாளர் சுஜித்ரா எஸ்.ராவ். மிகவும் பிரபலமான அந்த புத்தகத்தை திரைப்படமாக எடுக்க முயற்சித்து வரும் சுஜித்ரா, விஜய்யின் கடைக்கண் பார்வைக்காக காத்திருக்கிறார். காரணம் தனது புத்தகத்தில் உள்ள கதை விஜய்க்கு மட்டுமே பொருத்தமாக இருக்கும் என்றும், அதில் வேறு யாரையாவது நடிக்க வைக்க வேண்டி வந்தால் படத்தை முழுமையாக கைவிட்டுவிடுவேன் என்றும் பிடிவாதமாக உள்ளார். விஜய்யின் தீவிர ரசிகையான சுஜித்ரா சமீபத்தில் பிகில் திரைப்படத்தை பார்த்துள்ளார். 

உடனடியாக தனது கருத்துக்களை டுவிட்டரில் பகிர்ந்துள்ள அவர், "புட்பால் டீமில் உள்ள அனைத்து பெண்களும் பொருத்தமாகவும், சிறப்பாகவும் நடித்துள்ளதாகவும், எங்களுக்குள் இருந்த சிங்கப் பெண்ணை தட்டி எழுப்பியதற்கு நன்றி" என்றும் பதிவிட்டுள்ளார். உடனே சுஜித்ராவை டுவிட்டரில் முற்றுகையிட்ட விஜய் ரசிகர்கள், தி ஹைவே மாஃபியா படம் எப்போ ரெடியாகும், விஜய் அண்ணாவோட அடுத்த படத்தை நீங்க தான் இயக்கனும் ஏகப்பட்ட அன்பு கட்டளை போட்டிருக்காங்க. சிலர் உங்க கதை என்னாச்சு, விஜய் அண்ணாகிட்ட கதை சொன்னீங்களா இல்லையா என கேள்வி கேட்டிருக்காங்க. ஆனால் விஜய் ஓகேன்னு சொன்னா உடனே ஷூட்டிங்க போக நான் தயார்ன்னு சொல்றாங்க சுஜித்ரா ராவ்.