vijay fans anger for keerthi suresh attitude

ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் இளையதளபதி விஜய் நடித்து வரும் ‘தளபதி 62’ படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இப்படத்தில் இவருக்கு ஜோடியாக கீர்த்தி சுரேஷ் நடிக்க, இன்னும் பல முன்னணி நட்சத்திரங்கள் நடித்து வருகின்றனர். மேலும் இப்படத்திற்கு இசைப்புயல் ஏ.ஆர்.ரகுமான் இசையமைக்கிறார்.

இந்த தளபதி 62 படத்தின் படப்பிடிப்பு சென்னை, கொல்கத்தா, மும்பை ஆகிய நகரங்களில் நடைபெற்று வருகிறது. சமீபத்தில் இதன் படப்பிடிப்பு சென்னையில் உள்ள பிரபல கல்லூரியில் நடந்தது. அங்கு விஜய் இளைஞர்களுடன் பைக்கில் ஊர்வலம் செல்வது போன்ற காட்சி புகைப்படம் இணையத்தில் வெளியாகி வைரலாகியது. இதையடுத்து, இந்த திரைப்படம் வரும் தீபாவளிக்கு வெளியாக இருப்பதாக படக்குழுவினர் ஏற்கெனவே தெரிவித்திருந்தனர்.

இதையடுத்து, முன்னதாக படத்தில் வரும் விஜய்யின் தோற்றம் போன்று ஒரு புகைப்படம் வெளியானது. அந்த புகைபடத்தை கண்ட ரசிகர்கள் விஜய் துப்பாக்கி படத்தை விட இதில் அழகாகவும், மாஸாகவும், இருக்கிறார் என்று கமெண்ட் செய்தனர்.

இந்நிலையில், விஜய் 62 படப்பிடிப்பு தளத்தில் எடுக்கப்பட்ட புகைப்படம் ஒன்று தற்போது சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகியுள்ளது. அந்த புகைப்படத்தில் சோபாவில் அமர்ந்திருக்கும் கீர்த்தி தரையில் உட்கார்ந்திருக்கும் விஜய்யின் கால் மீது தனது காலை வைத்து மிதித்துக் கொண்டிருக்கிறார். இந்த புகைபடத்தை பார்த்த விஜய் ரசிகர்கள அனைவரும் விஜய் மீது காலை வைக்க ஈப்படி கீர்த்தி சுரேஷ்க்கு தைரியம் வந்தது என கடும் கோபத்தில் உள்ளனர்.

Scroll to load tweet…