இதய நோயால் பாதிக்கப்பட்ட அண்ணனின் ஆசையை நிறைவேற்ற தளபதி விஜய்க்கு, அவரது தங்கை எழுதிய நெஞ்சை உருக்கும் கடிதம் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. 

நடிகர் விஜய்க்கு கோலிவுட் திரையுலகில்,  மிகப்பெரிய ரசிகர் கூட்டமே உள்ளது என்பது அனைவரும் அறிந்தது தான். அவரது வெறித்தனமான ரசிகர்களாக பல இளைஞர்கள் உள்ளனர்.  அவருடைய படம் பற்றிய எந்த தகவலும் அதனை வைரலாக்குவது மட்டும் அல்லாமல் பல்வேறு உதவிகளையும் விஜய் ரசிகர் மன்றத்தின் மூலம் செய்து வருகிறார்கள்.

இந்நிலையில் விஜய்யின் ரசிகை ஒருவர், மிகவும் உருக்கமான கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். இந்த கடிதம் தற்போது சமூக வலைதளங்களில் மிகவும் வைரலாகப் பரவி வருகின்றது.  இந்த கடிதத்தில் எழுதி இருப்பது "அன்புள்ள விஜய் அண்ணா அவர்களுக்கு உங்கள் தங்கை எழுதுவது. என் அண்ணன் அருண்குமார் உங்களுடைய அனைத்து படங்களும் பார்த்து வெறித்தனமான ரசிகன் ஆனவன்.  நீங்கள் என்றால் அவனுக்கு மிகவும் உயிர்.  உங்களைப் பற்றி மிகவும் பெருமையாகப் பேசுவான். உங்களை காண வேண்டும் என்ற ஆர்வம் எப்போதும் அவன் மனதில் நிற்கும். அவனுக்கு இதயம் சம்பந்தமான அறுவை சிகிச்சை உடனடியாக அளிக்க வேண்டும் என மருத்துவர் கூறியுள்ளார். அவனுக்கு மிகவும் பயமாக உள்ளது. அவனுடைய ஆசை உங்களை பார்க்க வேண்டும் என்பதுதான். அதை முடியாது என தெரிந்தும் அவன் உங்களைக் காண முயற்சி செய்துள்ளான். அவன் செய்த அனைத்து முயற்சிகளும்  தோல்வியடைந்தது. எனவே அனைத்து விஜய் ரசிகர்கள் இதை படித்து பார்த்து பொய்யான நினைத்துவிட வேண்டாம். என்னுடைய கனவும், என் அண்ணனுடைய ஆசையை நிறைவேற்றி தருமாறு என் நண்பா,  நண்பிகளை வேண்டுகிறேன் என எழுதியுள்ளார்.

மேலும் தன்னுடைய ஊர் வேலூர் என்றும், தன்னுடைய போன் நம்பரையும் இந்த கடிதத்தில் அவர் வெளியிட்டுள்ளார்.  மேலும் தளபதி என ரத்தத்தினால் எழுதப்பட்ட எழுத்தும் இதில் உள்ளது. ஆனால் இப்படி வெளியான கடிதம் உண்மையா, பொய்யா, என தெரிவது மற்றொருபுறம் இருந்தாலும், இரத்தத்தால் எழுதப்பட்ட விஜய் ரசிகரின் உணர்வுக்கு மதிப்பளித்து... இது உண்மை என தெரியவரும் பட்சத்தில் விஜய் அந்த ரசிகரை சந்திக்க வேண்டும் என்பதே விஜய் ரசிகர்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.