அடப்பாவி அட்லீ... எங்க தளபதியை வச்சி செஞ்சிட்டியே... சோசியல் மீடியா வீடியோவால் அதிர்ந்த விஜய் ரசிகர்கள்...!

அட்லீ இயக்கும் அனைத்து படங்களும் காப்பி பெஸ்ட் வகையாறக்கள் தான் என்ற கருத்து சினிமா ரசிகர்கள் மத்தியிலும், சமூக வலைத்தளங்களிலும் பரவி வருகிறது. இந்த நிலையில் ’பிகில்’ படத்தில் இடம் பெற்ற விஜய்யின் மாஸ் சீனும் காப்பியடிக்கப்பட்டது, விஜய் ரசிகர்களை கடுப்பேற்றியுள்ளது.

பல சர்ச்சைகளையும், பிரச்சனைகளையும் கடந்து வெளியான ’பிகில்’ திரைப்படம் மாஸ் காட்டினாலும், அதன் கதை மற்றும் காட்சிகள் பல படங்களின் காப்பி பெஸ்ட் என நெட்டிசன்கள் விமர்சித்து வருகின்றனர். ஏற்கெனவே காப்பி பெஸ்ட் இயக்குநருனு பெயர் எடுத்த அட்லீ, ’பிகில்’ படத்தில் வரும் காட்சிகளை  பல படங்களில் இருந்து காப்பி அடிச்சதா சர்ச்சைகள் எழுந்திருக்கு. அட்லீயின் போதாத நேரம், ’பிகில்’ படத்தின் காட்சிகள் அந்த படத்தில் இருந்து சுட்டது, இந்த படத்தில இருந்து சுட்டதுன்னு சமூக வலைத்தளங்களில் வீடியோ ஆதாரங்கள் வைரலாகிட்டு இருக்கு. 

இதுக்கு முன்னகூட, ’பிகில்’ படத்தில் விஜய் பேசும் மாஸ் டைலாக், பேட்டி ஒன்றில் சிவகார்த்திகேயன் பேசினதுன்னுங்கிற சர்ச்சை பெரும் புயலைக் கிளப்பியது. இது எல்லாம் போதாதுன்னு, ’பிகில்’ படத்தில் விஜய் ரசிகர்கள் விசில் அடித்து, கைதட்டி ரசித்த மாஸ் காட்சி ஒண்ணும் காப்பி பெஸ்ட்டுங்கிற தகவல் வெளியாகியிருக்கு. ’பிகில்’படத்தில் விஜய் கண்ண மூடிக்கிட்டு, புட்பால் பயிற்சி கொடுப்பார். விறுவிறுப்பா, செம கெத்தா இருக்குற அந்த காட்சி, ஏற்கெனவே சமூக வலைத்தளங்களில் வைரலாகிட்டு இருந்த கோட்ச் ஒருத்தரோட வீடியோங்கிறது தெரிய வந்திருக்கு.<

/p>

 

இந்த இரண்டு வீடியோவையும் சேர்ந்து நெட்டீசன்கள் சோசியல் மீடியாவை கலக்கிட்டு இருக்குற சமயத்தில, பிகில் படத்துக்காக அட்லீ இன்னும் எதை,. எதை தான் காப்பி அடிச்சிருக்காரோ, இனி என்னத்த எல்லாம் நாங்க பார்க்க வேண்டி வருமோன்னு விஜய் ரசிகர்கள் கலக்கத்தில் இருக்காங்க.