ட்விட்டரில் வரம்பு மீறி பேசிய விஜய் ரசிகர் ஒருவருக்கு நடிகை சுஜா அவரது பாணியிலேயே பதிலடி கொடுத்தது ஒரு சிலரால் வரவேற்கப்பட்டாலும், பலரை முகம் சுழிக்க வைத்துள்ளது. நடிகை சுஜா வருணி கடந்த ஆண்டு பிக்பாஸ் சீசன் ஒன்னில் வைல்ட் கார்ட் என்ட்ரியாக சென்று பிரபலம் ஆனவர். இவர் பல்வேறு படங்களில் கவர்ச்சி வேடங்களிலும் நடித்தவர். அதிலும் மிளகா என்கிற படத்திலும் கிடாரி என்கிற படத்திலு சுஜாவின் வேடம் அனைவராலும் பாராட்டப்பட்டது. குத்து பாடல்களிலும் செமயாக ஆட்டம் ஆடி ரசிகர்களை கவர்ந்தவர். 

இவர் பிரபல நடிகையாக ஒருபுறம் இருந்தாலும் சிவாஜியின் பேரனை காதலித்து வருகிறார். விரைவில் இவர்களுக்கு திருமணமும் நடைபெற உள்ளது. சமூக வலைதளமான ட்விட்டரில் சுஜா எப்போதும் ஆக்டிவாக இருப்பவர். அதிலும் பிக்பாஸ் தொடர்பாக தொடர்ந்து தனது கருத்துகளையும், எதிர்பார்ப்புகளையும் சுஜா ட்விட்டரில் வெளியிட்டு வருகிறார். பிக்பாஸ் வீட்டில் இருந்த சென்ட்ராயனுக்கு ஆதரவாக சுஜா கருத்துகளை வெளியிட்டு வந்தார். சென்ட்ராயன் வீட்டில் இருந்து வெளியேறிய நிலையில் இதனை தான் எதிர்பார்க்கவில்லை என்று சோகத்துடன் சுஜா ட்விட்டரில் கூறியிருந்தார்.

 

இந்த நிலையில் யாஷிகா பிக்பாஸ் வீட்டில் இருந்து ஞாயிறன்று வெளியேறினார். இதற்கும் யாஷிகா வீட்டில் இருந்து வெளியேறியதை தன்னால் ஏற்க முடியவில்லை என்கிற ரீதியில் சுஜா ட்விட்டரில் எழுதியிருந்தார். சுஜாவின் இந்த ட்வீட்டிற்கு விஜய் ரசிகரான அருள் என்பவர் ஒருமையில் பதில் அளித்திருந்தார். மேலும் மு…ட என்கிற வார்த்தையை பயன்படுத்தி சுஜாவை அந்த ரசிகர் வசைபாடியிருந்தார். 

இதனால் ஆத்திரம் அடைந்த சுஜா, உங்களுக்கு அழகு தமிழில் பேச பிடிக்காது போல அதனால் உங்கள் பாஷையிலேயே பேசுகிறேன் என்று கூறி அந்த விஜய் ரசிகரை போடா பு…ட என்று பதிலுக்கு வசை பாடியுள்ளார் சுஜா. ஆபாசமா பேசிய ரசிகருக்கு ஆபாசமாகவே பதில் அளித்த சுஜாவை ஒரு தரப்பினர் பாராட்டி வருகின்றனர். ஆனால் ஆண்கள் கொச்சையாக பயன்படுத்தும் ஒரு வார்த்தையை சுஜா அதன் அர்த்தம் தெரியாமலேயே பேசியுள்ளாரா? அல்லது தெரிந்து தான் பேசியுள்ளாரா? என மற்றொரு தரப்பினர் விமர்சனங்களை முன் வைத்து வருகின்றனர்.