தளபதி விஜய்யின் தீவிர ரசிகர் பாலா என்பவர், தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அனைவரையும் அதிர்ச்சியடைய வைத்துள்ளது. மேலும் இவர் தற்கொலை செய்வதற்கு முன், ட்விட்டரில் இவர் போட்ட பதிவு அனைவரையும் உருக வைத்துள்ளது. 

சமூக வலைத்தளத்தில் மிகவும் ஆக்ட்டிவாக இருக்கும் தளபதி ரசிகர்களில் ஒருவர், பாலா. தளபதியின் படம் குறித்து எந்த தகவல் வந்தாலும், அதனை பகிர்ந்து சமூக வலைத்தளத்தில் ட்ரெண்ட் ஆக்கும் ரசிகர்களில் இவரும் ஒருவர். எனவே இவரை பற்றி பலருக்கு தெரிந்திருக்க வாய்ப்பு உண்டு.

இந்நிலையில் இவர் காதல் பிரச்சனை காரணமாக, மிகவும் மன வருத்தத்துடன் இருந்ததாக கூறி நம்பர் ஒருவர் வெளியிட்ட தகவல் சமூக வலைத்தளத்தில் வேகமாக பரவியது. மேலும் குடும்பத்திலும் இவருக்கு பல பிரச்னையாம். தனக்கு மட்டும் அணைத்து விஷயங்களிலும் தோல்வி மட்டுமே கிடைத்ததாகவும், அதை அனைத்தையும் தகர்த்தெறிந்து விட்டு நான் வந்தாலும், ஒரு நிலைக்கு மேல் என்னால் முடியவில்லை.

அதனால் தற்கொலை செய்து கொள்கிறேன் என ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்து விட்டு, கடைசி வரை தளபதியையும், மாஸ்டரையும் பார்க்காமலே போகிறேன் என தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளார். இந்த பதிவும், பாலாவின் இழப்பும் விஜய் ரசிகர்கள் மட்டும் இன்றி அணைத்து தரப்பினரையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

மேலும் #ripbala என்கிற ஹேஷ்டாக்கை தேசிய அளவில் விஜய் ரசிகர்கள் ட்ரெண்ட் ஆக்கி இவருடைய மறைவிற்கு தங்களுடைய இரங்கலை தெரிவித்துள்ளனர். அதே நேரத்தில் தீர்க்க முடியாத பிரச்சனை என்று எதுவுமே இல்லை. தற்கொலை செய்வது எதற்கும் முடிவானது என்று பலர் கருத்து தெரிவித்து வருகிறார்கள்.