vijay enter in political kamalahassan answer

முன்னணி நடிகர்களாக இருந்தவர்கள் தற்போது மும்முரமாக அரசியல் களம் காணவும் ஆர்வம் காட்டி வருகிறார்கள்.

அந்த வகையில் பல வருடங்களாக அரசியலில் குதிப்பேன் என கூறி வந்த ரஜினி தற்போது ஆன்மீக அரசியல் என்பதை கையில் எடுத்துள்ளார். அதே சமயம் திரைப்படம் நடிப்பதிலும் கவனம் செலுத்தி வருகிறார். 

இவரை போலவே முன்னணி நடிகர் கமல்ஹாசனும் 'மக்கள் நீதி மய்யம்' என்கிற கட்சியை துவங்கி பல்வேறு கோணங்களில் தன்னுடைய அரசியல் பிரவேசத்தை நிரூபித்து வருகிறார்.

இந்நிலையில் நடிகர் கமல்ஹாசன் ட்விட்டர் பகுதியில் கலந்துரையாடினார். இதில் ரசிகர் ஒருவர் உங்கள் கேட்ட தம்பி நடிகர் விஜய் அரசியலுக்கு வந்தால் நீங்கள் வரவேற்பீர்கலா? என கேள்வி எழுப்பினார். 

இதற்கு பதிலளித்த கமல், 'எனது அனைத்து தம்பிகளையும் வரவேற்கிறேன். அதுவும் இவர் எனக்கு மிகவும் பிடித்த தம்பி. எனக்கு மட்டுமல்ல அனைவருக்கும் பிடித்த தம்பி ஆகையால் கண்டிப்பாக வரவேற்கிறேன் என பதிலளித்தார். 

Scroll to load tweet…