நடிகர் விஜய்க்கு, தமிழகத்தில் எந்த அளவிற்கு ரசிகர்கள் இருக்கின்றனரோ... அதே அளவுக்கு கேரளாவிலும் வெறித்தனமான ரசிகர்கள் உள்ளனர்.  குறிப்பாக விஜய்க்கு அங்கு பெண் ரசிகைகள் அதிகம் என்றே கூறலாம்.

விஜய்யின் பிறந்த நாள் என்றால், அதனை மிகவும் ஆடம்பரமாக கொண்டாடி வரும் கேரள ரசிகர்கள், விஜயின் புதிய திரைப்படங்கள் வெளியாகும் போது கோலிவுட் ரசிகர்களுக்கு நிகராக கட் அவுட், தோரணம், ப்ளக்ஸ், பாலபிஷேகம் என தூள் கிளப்பி விடுவார்கள். 

மேலும் இதையே மிஞ்சும் அளவிற்கு, அங்கு விஜய்க்கு பெரிய சிலை ஒன்றையும் வைத்துள்ளனர். இந்த சிலையில் சிறப்பு என்று பார்த்தல், கை, கால்கலை அசைக்கும் அளவுக்கு அமைக்கப்பட்டுள்ளது. விஜயின் பாடலுக்கு இந்த விஜய் சிலை கை கால்களை ஆட்டி நடனம் கூட ஆடுமாம். 

ஒரு முறை விஜய் கேரளாவிற்கு சென்ற போது, ரசிகர்கள் அவரது காரை துரத்தி வந்து அவரை வழியனுப்பிய நெகிழ்ச்சி சம்பவங்களுக்கு உண்டு.

கரைபுரண்டு ஓடும் வெள்ளம்:

இப்படி விஜய் மீது தீராத அன்பை பொழிந்த கேரள ரசிகர்கள் இன்று தொடர் கன மழை காரணமாக வெள்ளத்தில் சிக்கியுள்ளனர். மேலும் தொடர்ந்து பெய்து வரும் மழையால், பாலங்கள் இடிந்து, மண் சரிவு ஏற்பட்டு, பல வீடுகள் நிலை குலைந்து மண்ணோடு மண்ணாக மாறியுள்ளது. 

இதனால் பல குடும்பங்கள், உணவு உடை என எதுவும் இல்லாமல் தங்க கூட சரியான இடம் இன்றி அல்லாடி வருகின்றனர். மேலும் 100-க்கும் மேற்பட்டோர் இறந்துள்ளதாகவும் கூறப்படுகிறது. 

கன மழை காரணமாக 7000 கோடிக்கும் மேல் சேதம் ஏற்பட்டுள்ளதாக கூறியுள்ள அம்மாநில முதலமைச்சர், அவரவரால் முடிந்த உதவியை கேரள மக்களுக்கு செய்யுமாறு கூறியுள்ளார். இதனால் தமிழகம், கர்நாடாக, உள்ளிட்ட பல மாநில அரசுகளும் உதவி வருகின்றனர்.

அதே போல் திரையுலக பிரபலங்கள் பலரும் தொடர்ந்து தங்களால் முடிந்த நிதி உதவியை கொடுத்து வருகின்றனர். அந்த வகையில் இது வரை 

சிவகார்த்திகேயன்- ரூ. 10 லட்சம்
விஜய் தேவரகொண்டா- ரூ. 5 லட்சம்
அல்லு அர்ஜுன்- ரூ. 25 லட்சம்
மம்முட்டி, துல்கர் சல்மான்- ரூ. 25 லட்சம்
அனுபமா பரமேஸ்வரன்- ரூ. 1 லட்சம்
மோகன்லால்- ரூ. 25 லட்சம்
கமல்ஹாசன்- ரூ. 25 லட்சம்
சூர்யா, கார்த்தி- ரூ. 25 லட்சம்
விஷால்- ரூ. 10 லட்சம்
ரோஹினி - 2 லட்சம்

கொடுத்து உதவியுள்ளனர். ஆனால் கேரளாவில் அதிக ரசிகர்கள் பலத்தை கொண்ட விஜய் ஏன்? இன்னும் கேரளாவிற்காக எந்த நிதி உதைவியும் செய்யவில்லை என கேள்வி எழுப்பி வருகின்றனர். 

இன்னும் சிலர் எப்போதும் உதவிகள் செய்யும் போது, அதனை ரகசியமாக செய்து வரும் விஜய் கேரள மக்களுக்கும் ரகசியமாகவே உதவிகள் செய்ய வாய்ப்பு உள்ளது என கூறி வருகின்றனர். எது உண்மை என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.