Vijay director sixteen years later What is the picture name
விஜய்-யை வைத்து ‘ஷாஜகான்’ படத்தை இயக்கிய இயக்குனர் ரவி பதினாறு வருடங்கள் கழித்து தற்போது இயக்கியுள்ள படம் ‘செயல்’.
நடிகர் விஜய் நடிப்பில் வெளிவந்த‘ஷாஜஹான்’ படம் ரசிகர்களால் மறக்க முடியாத படங்களில் ஒன்று. அந்தப் படத்தில் விஜய் பேசும் காதல் வசனமும், பாடல்களும் இன்றளவும் அனைவராலும் ரசிக்கப்படுகிறது.
இந்த படத்தை இயக்குனர் ரவி இயக்கியிருந்தார். இந்தப் படம் வெளியாகி பதினாறு வருடங்கள் ஆகிவிட்டது.
தற்போது இயக்குநர் ரவி புதுமுகங்களை வைத்து ‘செயல்’ என்ற படத்தை இயக்கியுள்ளார். இந்த படத்தின் கதை வடசென்னையை சுற்றி எடுக்கப்பட்டு உள்ளது.
இந்தப் படத்தின் முக்கிய கதாபாத்திரத்தில் மனிஷ்காந்த், ஆடுகளம் ஜெயபாலன் நடித்து உள்ளனர்.
இந்தப் படத்தை பற்றி இயக்குனர் ரவி, ‘‘வடசென்னையைய்ம் அங்கு வாழும் மக்களின் வாழ்க்கை பற்றியும் கதை நகரும். இந்தப் படம் கண்டிப்பாக மக்களுக்கு பிடிக்கும்" என்று தெரிவித்துள்ளார்.
