Vijay did not make the mistake of Advice and Fan fan ...

நடிகர் விஜய் தன்னுடைய பட்டத்தை தளபதி என்று போட்டுக் கொள்வது சரியல்ல என அவருக்கு ரசிகர் ஒருவர் அட்வைஸ் செய்துள்ளார்.

விஜய்யின் பிறந்தநாளை முன்னிட்டு புதிய படத்தின் பர்ஸ்ட்லுக் போஸ்ட்டரை தேனாண்டாள் நிறுவனம் வெளியிட்டது. மேலும் இரண்டாவது போஸ்டரும் வெளியானது.

இதில் இதுவரை இளைய தளபதி என்ற அடைமொழியில் அழைக்கப்பட்ட விஜய் ‘மெர்சல்’ படம் முதல் அதை சுருக்கி தளபதி என பயன்படுத்தியுள்ளனர். இதனால் அவருக்கு எதிர்ப்பு கிளம்பியுள்ளது.

இந்த நிலையில் ரசிகர் ஒருவர் தனது முகநூல் பக்கத்தில், “தவறோ சரியோ ஒருவர் ஒரு பெயரால் அறியப்படுகிறார். அவருடையவர்கள் அதைக் கொண்டாடவும் செய்கிறார்கள். நடிகர் விஜய் தன்னுடைய பட்டத்தை தளபதி என்று போட்டுக் கொள்வது சரியல்ல.

திடீரென புரட்சிக் கலைஞர் என்பதில் புரட்சியை மட்டும் எடுத்துவிட்டால் ஒத்துக் கொள்வீர்களா? எவ்வளவு உயரத்திற்குப் போனாலும் சென்சிபிலாக நடந்து கொள்வது எப்படி என்பதைத் தெரியாமல் இருப்பது நல்லதில்லை.

வீம்பிற்கு மாவு இடிக்கக் கூடாது என யாராவது விஜய்க்கு சொல்லிக் கொடுத்தால் நல்லது. என ரசிகர் ஒருவர் பதிவிட்டுள்ளார்.