அர்ஜுன் ரெட்டி நடிகர் விஜய் தேவரகொண்டா ஹைதராபாத்தில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

தெலுங்கில்  வெளியான "அர்ஜுன் ரெட்டி"  மூலம்  பிரபலமான விஜய் தேவரகொண்டா தமிழில் நோட்டா  மூலம் மிகவும் பிரபலமடைந்தார். அர்ஜுன் ரெட்டி படத்தின் பிரமாண்ட வெற்றியால் விஜய் தேவரகொண்டாக்கு தமிழகத்திலும் ஏகப்பட்ட ரசிகர்கள், ரசிகைகள் உள்ளனர்.

தெலுங்கில் பிசியாக நடித்து வரும் விஜய் தேவரகொண்டா  ஓய்வு எடுக்க நேரம் இல்லாமல் நடித்து வருகிறார். இந்நிலையில், ஹைதராபாத்தில் உள்ள பிரபல மருத்துவமனை ஒன்றில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். பிரேக் எடுக்காமல் நடித்து வருவதால், மனஉளைச்சல், காய்ச்சல் ஏற்பட்டதால், அவருக்கு ஓய்வு தேவை என்பதால் அவரை மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர்.  அவருக்கு கவலைப்படும்படி ஒன்றும் இல்லை.  ஆனால் அவரால் தற்போது . அதனால் உடனே குணமடைய மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாக  அவருடைய பிஆர்ஓ கூறியுள்ளார்.

இதுகுறித்து பேசிய விஜய் தேவரகொண்டா, கடந்த புதன்கிழமை காலை 6 மணி வரை படப்பிடிப்பில் இருந்தேன். அப்போது எனக்கு காய்ச்சல் வந்து சோர்வாகிவிட்டேன். சீக்கிரம் குணமடைய ஓய்வில் மருத்துவமனையில் சேர்ந்துள்ளேன் என தெரிவித்துள்ளார்.

நடிகர் விஜய் தேவரகொண்டா காய்ச்சல், சோர்வு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதை அறிந்து தெலுங்கு சினிமா வட்டாரம் பரபரப்பாகியுள்ளது.