'நோட்டா' படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானவர் நடிகர் விஜய் தேவாரக்கொண்டா. இந்த படம் தமிழில் கலவையான விமர்சனங்களை பெற்றாலும்,  நல்ல கருத்துக்களை கொண்ட படம் என ரசிகர்கள் மத்தியில் விமர்சனங்களை பெற்றது.

இந்தப் படத்தைத் தொடர்ந்து, தற்போது விஜய் தேவாரக்கொண்டா டியர் காம்ரேட் படத்தில் நடித்து முடித்துள்ளார்.  இந்த படம் தமிழ், தெலுங்கு, மலையாளம் ஆகிய மூன்று மொழிகளில் உருவாகியுள்ளது.

ஏற்கனவே வெளியான டியர் காம்ரேட் படத்தின் டிரைலர், நல்ல விமர்சனங்களை பெற்ற நிலையில் படத்திற்கும் எதிர்பார்ப்புகள் அதிகரித்துள்ளது. இந்த படத்தில் இவருக்கு ஜோடியாக 'கீதா கோவிந்தம்' படத்தில் நடித்த நடிகை ராஷ்மிகா மந்தனா நடித்துள்ளார். 


இந்நிலையில் இந்த படத்தின் ப்ரோமோஷன் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட இவர், தமிழை முழுமையாக கற்றுக் கொள்ளாமல் நடித்தது மிகவும் சவாலாக இருந்ததாகவும் தற்போது பட வாய்ப்புகள் அதிகமாக உள்ளதால் திருமணம் பற்றி எந்த ஒரு யோசனையும் இல்லை என கூறியுள்ளார்.  மேலும் தமிழில் தலைசிறந்த இயக்குனர்களான மணிரத்னம் ஷங்கர் உள்ளிட்ட இயக்குனர்களின் இயக்கத்தில் நடிக்கும் ஆசை உள்ளதாகவும், கண்டிப்பாக நடிகர் விஜய் சேதுபதியுடன் ஒரு படத்திலாவது இணைந்து நடித்து விட வேண்டும் என்பது தன்னுடைய ஆசை என கூறியுள்ளார்.  விஜய் சேதுபதி நடித்த 'சூப்பர் டீலக்ஸ்' படத்தை பார்த்த பின் அவருடைய தீவிர ரசிகனாக மாறி விட்டதாகவும் விஜய் கூறியுள்ளார்.