'அர்ஜுன் ரெட்டி'  படத்தின் மூலம் தெலுங்கு திரையுலகில் மிகவும் பிரபலமானவர் நடிகர் விஜய் தேவரகொண்டா.  தமிழில் 'நோட்டா'  படத்தின் மூலம் அறிமுகமானார்.

இந்த படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் எதிர்ப்பார்த்த அளவிற்கு வரவேற்பு   கிடைக்கவில்லை என்றாலும்,  நல்ல கருத்துடைய படம் என பலருடைய பாராட்டைப் பெற்றது.

இந்நிலையில் இந்த படத்தை தொடர்ந்து, 'அருவி', 'ஜோக்கர்' போன்ற தரமான கதைகளை தேர்வு செய்து தயாரித்து வரும் தயாரிப்பாளர் எஸ்.ஆர். பிரபு, நடிகர்  கார்த்திக் நடிக்கும் தேவ் படத்தை தொடர்ந்து தயாரிக்க உள்ள படத்தில் நடிகர்  விஜய் தேவரைக்கொண்ட நடிக்க உள்ளார்.

மிக குறுகிய காலத்திலேயே தெலுங்கு, தமிழ் என தொடர்ந்து பல  பட வாய்ப்புகளை பெற்று வரும் விஜய் தேவரகொண்டா அடுத்ததாக இந்தியிலும் கால் பதிக்க உள்ளார்.  

இந்தியில் உருவாகும் பிரபல கிரிக்கெட் வீரர், கபில்தேவின் வாழ்க்கை வரலாற்று கதையிலும் நடிக்கிறார்.   இந்த படத்தில் விஜய் தேவரைக்கொண்டா ,  பிரபல கிரிக்கெட் வீரர் ஸ்ரீகாந்த் வேடத்தில் நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது.  கபில்தேவ் வேடத்தில் நடிகர் ரன்வீர் சிங் நடிக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.