நடிகர் விஜய் பிறந்த வளர்ந்தது எல்லாம் சாலிகிராமத்தில் உள்ள வீட்டில் தான். இவர் முன்னணி நடிகர் என்கிற அந்தஸ்த்தை எட்டிய பிறகு தன்னுடைய வீட்டை இசையமைப்பாளர் விஜய் ஆண்டனிக்கு வாடகை விட்டு விட்டு, அடையாரில் இருந்த சொந்த வீட்டிக்கு குடியேறினார்.

பின் அடையாறு வீட்டில் இருந்து மனைவி மற்றும் பிள்ளைகளோடு நீலாங்கரையில் உள்ள வீட்டிற்கு குடியேறினார். தற்போது அடையாறு வீட்டில் தான் விஜயின் அப்பா அம்மா வசித்து வருகின்றனர்.

இந்நிலையில் அந்த வீட்டில் இருந்து பனையூரில் உள்ள வீட்டிற்கு மாறியுள்ளாராம் விஜய். காரணம் தற்போது இவர் வசித்து வந்த நீலாங்கரை வீட்டில் நவீன வசதிகள் செய்ய திட்டமிடப்பட்டுள்ளதாம். 

இதற்க்கு முக்கிய காரணம் விஜயின் மகள் திவ்யா தானாம். இவர் தற்போது உள்ள வீட்டை இடித்து விட்டு நவீன வசதிகளுடன் வீடு கட்ட வேண்டும் என ஆசைப்பட்டதால் தன்னுடைய மகளுக்காக விஜய் நீலாங்கரையில் உள்ள வீட்டை இடித்து தரைமட்டம் ஆக்கிவிட்டு அங்கு புதிதாக வீடு கட்ட ஏற்பாடுகள் செய்துள்ளார். 

இதன் காரணமாக தற்போது மாணவி மற்றும் குழந்தைகளுடன் பனையூருக்கு சென்றுள்ளார். கடந்த ஆண்டு தான் நடிகர் 

அஜித் தன்னுடைய திருவான்மியூர் வீட்டை முழுவது இடித்து விட்டு நவீன வசதிகளுடன் கட்டி குடியேறினார் என்பது குறிப்பிடத்தக்கது.