தளபதி விஜய்யின் 46 ஆவது பிறந்தநாளை அவரது ரசிகர்கள் இன்று, கோலாகலமாக கொண்டாட முடியவில்லை என்றாலும், ட்விட்டரில், பேஸ் புக் போன்ற சமூக வலைத்தளங்களில் தூள் கிளப்பி வருகிறார்கள். விதவிதமான விஜய்யின் போஸ்டர்களை வெளியிட்டு தங்களுடைய கொண்டாட்டத்தை துவங்கி உள்ளனர்.

குறிப்பாக கொரோனா பிரச்சனை காரணமாக சென்னை உள்பட 4 மாவட்டங்களில் தற்போது முழு ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இது சென்னையில் உள்ள ரசிகர்களுக்கு மிகப்பெரிய ஏமாற்றத்தை கொடுத்துள்ளது.  

மேலும் இன்று விஜய்யின் பிறந்த நாள் ஸ்பெஷல்லாக மாஸ்டர் படத்தில் இருந்து ஏதேனும் அப்டேட் வெளியாகுமா என்றும் காத்திருக்கிறார்கள் . இந்நிலையில், ரசிகர்கள் எதிர்பார்ப்பை நிறைவு செய்யும் விதமாக சிறப்பு வீடியோ ஒன்று வெளியாக இருப்பதாகவும் ’Let Me Tell You A Kutty Story’ என்ற தலைப்பில் வெளியாகும் என்கிற தகவல் வெளியாகியுள்ளது.

இந்த வீடியோவில் ’மாஸ்டர்’ படத்தில் முக்கிய கேரக்டரில் நடித்த அர்ஜுன் தாஸ் தோன்ற இருப்பதாகவும் இந்த வீடியோ இன்று மாலை 4 மணிக்கு வெளியாக இருப்பதாக உள்ளது குறிப்பிடத்தக்கது. இந்த வீடியோ விஜய்யின் ரசிகர்களுக்கு ஸ்பெஷல் அப்டேட்டாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.