இயக்குனர் பரதன் இயக்கத்தில் இளையதளபதி விஜய் நடித்த, மற்றும் கீர்த்தி சுரேஷ் நடித்து வரும் 'பைரவா' படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து தற்போது போஸ்ட் புரடொக்ஷன்ஸ் பணிகளும் முடிவடையும் நிலையில் உள்ளது. 

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred

தமிழர் திருநாளான பொங்கல் தினத்தில் 'பைரவா' திரைப்படம் உலகம் முழுவதும் பிரமாண்டமாக வெளியாக உள்ளது.

இந்நிலையில் இந்த படத்தின் டிரைலர் ரிலீஸ் தேதி குறித்த தகவல் எப்போது வரும் என்ற எதிர்பார்ப்புடன் கோடிக்கணக்கான விஜய் ரசிகர்கள் காத்திருக்கின்றனர். ரசிகர்களின் காத்திருப்பு மிக விரைவில் முடிவுக்கு வரவுள்ளது என கூறியுள்ளார் இயக்குனர் பரதன்.

சற்று முன் 'பைரவா' படத்தின் இயக்குனர் பரதன் தன்னுடைய சமூக வலைத்தளத்தில் 'பைரவா' டிரைலர் தேதி வெகுவிரைவில் அறிவிக்கப்படும் என்று டுவீட் செய்துள்ளார். 

இந்த தகவலால் விஜய் ரசிகர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். ஒருவேளை இன்று அல்லது நாளை டிரைலர் ரிலீஸ் தேதி குறித்த தகவல் வெளிவரும் என்றும், வரும் புத்தாண்டு தினத்தில் 'பைரவா' டிரைலர் வெளிவர வாய்ப்பு உள்ளதாகவும் கூறப்படுகிறது. இதனால் விஜய் ரசிகர்கள் குஷியாகி உள்ளனர்.