மிகப் பிரம்மாண்டமான முறையில் தயாராகிவரும் தளபதி 63 படம் குறித்து அளவுக்கு அதிகமாக சர்ச்சைகள் வெளியாவதால் திருட்டுப்பட்டம் கட்டி கோர்ட்டுக்கு இழுத்திருக்கும் கதாசிரியரிடம் சரண்டராகி சமாதானம் பேச படக்குழு முடிவு செய்திருக்கிறது.

பொதுவாக அட்லி படம் ரிலீஸாகும் சமயத்தில் அவர் கதையை எங்கிருந்து சுட்டார் என்ற தகவலே வரும். ஆனால் இந்த முறை விஜய்யை வைத்து அவர் இயக்கும் படத்தின் அறிவிப்பு வந்தவுடனே, இது என்னுடைய கதை. அதை வைத்துத்தான் விஜய் படத்தை எடுக்கிறார் என்று கே.பி.செல்வா என்கிற குறும்பட இயக்குநர் அட்லீ மீது பகிரங்கமாகக் குற்றம் சாட்டினார்.பெண்கள் கால்பந்து விளையாட்டை மையப்படுத்தி அவர் எழுதியிருந்த கதையை பல மாதங்களுக்கு முன்பு அட்லீயிடம் கூறியிருந்தாராம். கதையை முழுமையாகக் கேட்டுவிட்டு பிறகு கூப்பிடுகிறேன் என்ற அட்லீ திரும்பக் கூப்பிடவே இல்லையாம்

அதனால், விஜய் 63 பட அறிவிப்பு வந்ததும், தென்னிந்திய எழுத்தாளர்கள் சங்கத்தில் புகார் அளித்திருக்கிறார் கே.பி.செல்வா.ஆனால்,.அச்சங்கத்தின் விதிகளின்படி சங்க உறுப்பினராக இணைந்து ஆறுமாத காலத்துக்குப் பிறகே கதைதிருட்டு புகார் அளிக்க முடியும் என்று கூறி எனது புகாரை நிராகரித்திருக்கின்றனர்.இதனால் கே.பி.செல்வா, நீதிமன்றத்தை நாடியிருக்கிறார்.

அந்த வழக்கு விசாரணை நேற்று முன் தினம் நடந்திருக்கிறது.விசாரணையின் போது, விஜய் படத்தைத் தயாரிக்கும் ஏஜிஎஸ் நிறுவன வழக்கறிஞர் ஆஜராகியிருக்கிறார்.அப்போது இருதரபினரின் கதைகளையும் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்க நீதிபதி உத்தரவிட்டாராம். அதற்கு ஜூன் பத்தாம் தேதி வரை அவகாசம் கேட்டிருக்கிறார் ஏஜிஎஸ் வழக்கறிஞர். அதை ஏற்றுக்கொண்டு வழக்கைத் தள்ளிவைத்தாராம் நீதிபதி.

நாம் கேள்விப்பட்டவரை இந்த ஜூன் 10 தேதி அவகாசத்துக்குள் கே.பி. செல்வாவிடம் சரண்டராகி அவருக்கு ஒரு பெரும் தொகையை நஷ்ட ஈடாகக் கொடுக்க முடிவு செய்திருக்கிறதாம் விஜய்,அட்லி, தயாரிப்பாளர் தரப்பு.