பெரும் சர்ச்சையை கிளப்பிய சர்க்கார் படத்தை அடுத்து, முதிய படத்தில் அரசியல் தலைவர்களை மெர்சலாக்கிய இயக்குனர் அட்லீயுடன் இயக்கத்தில் மூன்றாவது முறையாக நடிக்கிறார். கடைசியாக நடித்த சர்க்கார் படம் கதை திருட்டு மேட்டரில் சிக்கி மானத்தை வாங்கியதால், கடுப்பான விஜய் மறுபடியும் அட்லீயோடு சேருகிறார்.
என்னதான் பத்து படத்திலிருந்து கட் பேஸ்ட் பண்ணாலும், சாமார்த்தியமாக சீன்களை ஆட்டையைப் போட்டு அதை மாஸாக இன்றைய காலத்துக்கேற்ற க்ளாஸாக படமெடுக்கும் யுக்தியை கற்று வைத்திருக்கும் அட்லீயோடு சேருவதில் எந்த தவறுமில்லை என அடுத்து களம் இறங்குகிறார்.
மூன்றாவது முறையாக கூட்டணி சேர்ந்துள்ள இந்த படத்தின் கதையை பற்றி பல வதந்திகள் வந்துள்ளது ஆனால் இது அரசியல் படமோ போலீஸ் படமோ இல்லையாம். இது விளையாட்டை மையமாக கொண்ட படம் என்ற தகவல் வெளியாகி உள்ளது. அதனால் படத்தின் தலைப்பு ஜெர்சி 63 என தகவல் பரவியது. விஜய் கில்லி படத்தில் கபடி வீரராக நடித்தார்.
இந்தப் படத்தில் விளையாட்டு பயிற்சியாளராக நடிக்கிறார். என்ன மாதிரியான விளையாட்டு என்ற தகவல் வெளியாகவில்லை.
கிரிக்கெட் மற்றும் கபடி விளையாட்டு தொடர்பான நிறைய படங்கள் தயாராகி வருவதால் இதில் இந்த இரண்டைத் தவிர வேறு விளையாட்டு மையமாக இருக்கலாம் என்று தெரியவருகிறது. அதுமட்டுமல்ல, கில்லி, வெண்ணிலா கபடிக்குழு, இறுதிச்சுற்று போன்ற படங்களிலிருந்து ஆட்டையை சில சீன்களை, கொஞ்சம் கதையையும் உருவ உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
இந்த படத்தின் படப்பிடிப்பு வரும் ஜனவரி மாதத்தில் இருந்து தொடங்குகிறது. சென்னை புறநகர் பகுதியில் இதற்காக விளையாட்டு மைதான செட் போடப்பட்டு வருகிறது. படம் அடுத்த ஆண்டு தீபாவளியன்று வெளிவருகிறது. 80 கோடி ரூபாய் பட்ஜெட்டில் கல்பாத்தி அகோரம் தயாரிக்கிறார். விஜய் ஜோடியாக நயன்தாரா நடிக்கிறார். வில்லு படத்திற்கு பிறகு இருவரும் இணைகிறார்கள். இவர்கள் தவிர யோகி பாபு, விவேக் ஆகியோரும் நடிக்கிறார்கள். ஏ.ஆர்.ரஹ்மான் அமைக்கிறார்.
Read Exclusive COVID-19 Coronavirus News updates, at Asianet News Tamil.
மெய்நிகர் போட் ரேசிங் கேம் ஆடுங்கள் மற்றும் சவாலுக்கு உட்படுத்தி கொள்ளுங்கள். கிளிக் செய்து விளையாடுங்கள்
Last Updated Nov 27, 2018, 12:34 PM IST